சினிமா
சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் இதுவரை செய்துள்ள வசூல்!!


சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் இதுவரை செய்துள்ள வசூல்!!
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து கடந்த ஜூலை 14ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் மாவீரன்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் சரிதா, மிஸ்கின், சுனில், யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்களும் நடித்திருந்தனர்.
விஜய் சேதுபதி தனது குரல் மூலம் படத்தின் வெற்றிக்கு உதவியாக இருந்தார். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற மாவீரன் திரைப்படம் உலகளவில் வசூலில் சிறந்த வரவேற்பை பெற்றது.
இப்படம் வெளிவந்து 16 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 79 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 48 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
You must be logged in to post a comment Login