சிவகார்த்திகேயன் யார் என்று கூட தெரியாது!.. பிரபல நடிகர் ஓபன் டாக்
வினீத் ஶ்ரீனிவாசன்
இயக்குநர், நடிகர், பாடகர் என பன்முகத் திறமையாளராக இருப்பவர் தான் வினீத் ஶ்ரீனிவாசன். இவர் 2012 -ம் ஆண்டு வெளிவந்த Thattathin Marayathu என்ற படத்தை இயக்கி திரையுலகில் அறிமுகமானார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வினீத் ஶ்ரீனிவாசனிடம் தொகுப்பாளர், சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி குறித்து கேள்வி கேட்டார்.
இதற்கு அவர், நான் ஒரு முறை கடையில் பிரியாணி சாப்பிட்டு விட்டு வெளியே வந்தேன். அப்போது ஒருவர், “உங்களுக்கு கோகுல் தெரியுமா? அவர் என்னுடைய நண்பர். நீங்கள் பலவட்டம் என்று எடுத்த மியூசிக் வீடியோவுக்கு நடனப் பயிற்சி கொடுத்தது என் நண்பர் கோகுல் தான். என்னுடைய பெயர் சிவகார்த்திகேயன்” என்று கூறினார்.
அந்த சமயத்தில் எனக்கு அவர் யார் என்று தெரியாது. நான் அந்த நபருடன் கொஞ்சம் நேரம் பேசிவிட்டு வந்துவிட்டேன்.
சில நாட்கள் கழித்து பார்த்தால் மெரினா என்ற படத்தின் போஸ்டரில் அவரின் புகைப்படம் தெரிந்தது. இதையடுத்து குறுகிய காலத்தில் சிவகார்த்திகேயன் முன்னணி நடிகராக மாறிவிட்டார் என்று வினீத் ஶ்ரீனிவாசன் கூறியுள்ளார்.
Leave a comment