சினிமா
25 வயது இளைஞராக மாறும் கமல்! இந்தியன் 2ல் ஹாலிவுட் தொழில்நுட்பம்!!!
25 வயது இளைஞராக மாறும் கமல்! இந்தியன் 2ல் ஹாலிவுட் தொழில்நுட்பம்!!!
விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு கமல் தற்போது இந்தியன் 2, கல்கி உள்ளிட்ட மிக பிரம்மாண்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்தியன் 2 படத்தில் அவர் வயதான தோற்றத்தில் நடிக்கிறார், அதில் அவரது லுக் ஏற்கனவே போஸ்டர்கள் மூலமாக வெளியாகிவிட்டது.
கமல் 25 வயது லுக்கில் வரும் காட்சிகளும் படத்தில் இருக்கிறதாம். கமலை வயது குறைந்தவராக காட்ட ஹாலிவுட்டில் பயன்படுத்தும் Digital de-aging technologyயை தான் ஷங்கர் பயன்படுத்துகிறாராம்.
இதற்காக ஷங்கர் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். அவர் அமெரிக்காவில் இருக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: தள்ளிப்போன இந்தியன் 2 ரிலீஸ்.. புதிய ரிலீஸ் தேதி இதுதானா - tamilnaadi.com