russia
சினிமாபொழுதுபோக்கு

விண்வெளியில் படப்பிடிப்பு நடாத்தும் ரஸ்யா

Share

சர்வதேச விண்வெளி மையத்தில் முதன்முறையாக திரைப்படம் எடுக்கும் நாடு என்ற பெருமையை ரஸ்யா பெற்றுக்கொள்ளவுள்ளது.
திடீர் உடல்நல குறைபாடு ஏற்படும் விண்வெளி வீரரொருவரை காப்பாற்ற விண்வெளி நிலையத்திற்கு செல்லும் பெண் மருத்துவர்
தொடர்பான கதையை மையமாக வைத்து விண்வெளியில் திரைப்படம் எடுக்க ரஸ்யாவின் படப்பிடிப்புக் குழுவொன்று தீர்மானித்துள்ளது.
‘த சேலன்ஜ்’ என படத்திற்கு பெயரிடப்படவுள்ளது.
ரஷ்யாவின் விண்வெளி நிறுவனமான ரோஸ்காஸ்மாஸின் உதவியுடன் கஜகஸ்தானில் உள்ள பைகனூர் காஸ்மோட்ரோமில் இருந்து நடிகை யூலியா பெரசில், இயக்குநர் கிளிம் ஷிபென்கோ, விண்வெளி வீரர் அன்டன் ஷ்காப்லராவ் ஆகியோர் சோயுஸ் எம்எஸ் -19 விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தனர்.
12 நாட்கள் விண்வெளியில் காட்சிகளை படமாக்கவுள்ளனர்.
நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் உதவியுடன் விண்வெளியில் வைத்து எடுக்கப்படும் திரைப்படத்தில் டாம் க்ரூஸ் நடிக்க இருப்பதாக கடந்த ஆண்டே தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் தற்போது அமெரிக்காவை ரஷ்யா பின்தள்ளி, புதிய சாதனையை நிலைநாட்டவுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 690059a3978f9
சினிமாபொழுதுபோக்கு

நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: நிபுணர்கள் சோதனை

திரைத்துறை மற்றும் அரசியல் பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும்...

5 20
சினிமாபொழுதுபோக்கு

விஜய் கேட்ட கேள்வியால் நடிப்பதையே நிறுத்திய நடிகை ரோஜா… அப்படி என்ன சொன்னார்?

தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ரோஜா. தமிழ், தெலுங்கு,...

4 20
சினிமாபொழுதுபோக்கு

34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா

தென்னிந்திய சினிமாவில் திறமையான நடிகைகளில் ஒருவரான அமலா பாலுக்கு இன்று பிறந்தநாள். 34வது பிறந்தநாளை கொண்டாடும்...

3 20
சினிமாபொழுதுபோக்கு

வசூல் நாயகனாக மாறிய பிரதீப்.. Dude படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்..

அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த...