Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered 6
சினிமாசெய்திகள்

2018 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

Share

2018 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பதை குறித்து கீழே காணலாம்.

வடசென்னை:
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் வடசென்னை. தனுஷ் தயாரித்து நடித்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ஆண்ட்ரியா, அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், ஐஸ்வர்யா ராஜேஷ், டேனியல் பாலாஜி என பலரும் நடித்திருந்தனர்.

பரியேறும் பெருமாள்:
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் கதிர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள். இந்த படத்தில் கதிர் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் நடித்து இருந்தனர். இப்படம் மிக சிறந்த விமர்சனங்களை பெற்று தமிழ் சினிமாவில் சிறந்த படைப்புகளில் ஒன்றாக விளங்குகிறது.

96:
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா இருவரும் முதல் முறையாக இணைந்து நடித்து கடந்த 2018 – ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 96. இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரேம் குமார் இயக்கியிருந்தார். காதலை மையமாக வைத்து வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

காலா:
பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் காலா. இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரித்திருந்தார். மேலும் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ரஜினியுடன் இணைந்து நானா படேகர், ஹுமா குரேஷி, ஈஸ்வரி ராவ், மணிகண்டன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

ராட்சசன்
ராம்குமார் இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் ராட்சசன். விஷ்ணு விஷாலுடன் அமலா பால், சரவணன் என நிறைய பேர் இப்படத்தில் நடித்திருந்தார்கள். கிரைம் த்ரில்லர் கதைக்களத்தை கொண்டு தயாரான இந்த திரைப்படம் சமூகத்தில் நடக்கும் முக்கியமான விஷயத்தை பற்றி பேசி மாபெரும் வெற்றி பெற்றது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...