வெறுக்கத்தக்க பேச்சுக்களுக்கான முடிவுகாலம் இது – சனம் அதிரடி ருவிற்!
சர்ச்சைப் பேச்சுக்களின் மூலம் மட்டுமே பிரபலமானவர் நடிகை மீரா மிதுன்.
குறிப்பிட்ட ஒரு குலத்தவரை இழிவாகப் பேசி வீடியோ வெளியிட்டமைக்காக இவர் தற்போது கைதுசெய்யப்பட்டு, இம் மாதம் 27ம் திகதி வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், சர்ச்சை பேச்சுக்கு உறுதுணையாக இருந்த காரணத்துக்காக அவரது காதலனும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தற்போது மீரா மிதுனின் கைது தொடர்பாக நடிகை சனம் ஷெட்டி தனது டுவிற்றர் பதிவில் அதிரடி பதிவொன்றை பதிவுசெய்துள்ளார்.
“சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்துள்ள தமிழ்நாடு காவல்துறை மற்றும் சைபர் க்ரைம் பிராஞ்ச் பெருமையடைய வைக்கின்றன. கடந்த சில வருடங்களாகவே நாங்கள் அனைவரும் பொறுத்துக்கொண்டு வந்த வெறுக்கத்தக்க பேச்சுகளுக்கான முடிவுகாலம் இது!” என தனது டுவிற்றர் பதிவில் தெரிவித்துள்ளார்.