சினிமா

சூப்பர் ஸ்டார் நடிப்பதால் வேட்டையன் படத்தில் நடிக்கவில்லை.. வேட்டையன் குறித்து பேசியா மஞ்சு வாரியார்

24 66adbb402a058
Share

சூப்பர் ஸ்டார் நடிப்பதால் வேட்டையன் படத்தில் நடிக்கவில்லை.. வேட்டையன் குறித்து பேசியா மஞ்சு வாரியார்

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களுள் ஒருவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் வேட்டையன். இந்த படத்தின் இயக்குனர் ஜெய் பீம் படத்தை இயக்கிய TJ ஞானவேல்.

இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் பாலிவுட் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் நடித்துள்ளார். மேலும் மஞ்சு வாரியார், ராணா, துஷாரா விஜயன், ரித்திகா சிங், பகத் பாசில் என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். அதனால் இந்த படத்தின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முற்றிலுமாக முடிந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் வேட்டையன் படத்தில் நடித்த மஞ்சு வாரியார் கேரளாவில் உள்ள ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது படம் குறித்து பேசினார். இது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதாவது வேட்டையன் படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு “நான் வேட்டையன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மனைவியாக நடிக்கின்றேன். எனக்கு முதலில் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கின்றார் எனத் தெரியாது. நான் ஜெய் பீம் என்ற தரமான படத்தினை எடுத்த ஞானவேல் சாரின் படம் என்பதால் இந்த படத்திற்கு ஒப்புக்கொண்டேன்.

எனக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ஜோடியாக நடிக்கின்றேன் என்பதை விடவும், ஞானவேல் என்ற இயக்குநரின் படத்தில் நடிக்கின்றேன் என்ற பொறுப்பு மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது” என கூறியிருந்தார். மேலும் இந்த படம் நிச்சயம் பலருக்கும் பிடிக்கும் என கூறி ரஜினிகாந்த் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...