பிக் பாஸ் சீசன் 7 இல் கலந்து கொண்டு, 2ண்ட் ரன்னர் ஆக வந்தவர் தான் நடிகை மாயா. இவர் ஒரு மேடை நாடக நடிகர். அத்துடன் மேடை நாடகங்களில் நடிப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர்.
மேலும், மாயா ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபல படுத்திய படம் என்றால் அது கண்டிப்பாக கமல் நடித்த விக்ரம் திரைப்படம் தான். குறித்த படத்தில் சின்னதாக ரோலில் நடித்திருந்தாலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்வசம் ஈர்த்துள்ளார் மாயா.
பிக்பாஸ் வீட்டிலுள்ள மாயா அங்கு பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும், மக்களை மகிழ்விப்பதில் கை தேர்ந்தவராக காணப்பட்டார்.
இந்த நிலையில்,பிக் பாஸ் மாயாவின் பாக்ஸிங் வீடியோ ஒன்று தற்போது மீண்டும் வைரல் ஆகின்றது.
அதன்படி, குறித்த வீடியோவில் மாயா தனது மாஸ்டருடன் குத்துச் சண்டை பழகுகின்றார். இதை பார்த்த ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர்.