குழந்தைகள் விரும்பி உண்ணக் கூடிய சத்துமிக்க பொரியல் செய்து பரிமாற வேண்டும் என்றால் குடைமிளகாய் முட்டை பொரியலை செய்து கொடுத்து அசத்துங்கள். இது உடலில் வறட்சியை நீக்கி ஈரப்பதனை தக்க வைக்கிறது.
தேவையான பொருள்கள்:-
முட்டை – – 3
வெங்காயம் – – 2
குடைமிளகாய் -– 1
ப.மிளகாய் -– 1
மிளகு சீரகத் தூள் -– 2 கரண்டி
உப்பு – – தேவையான அளவு
எண்ணெய் – – தேவையான அளவு
செய்முறை:-
முதலில் குடைமிளகாய், தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
பிறகு அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக மாறிய பிறகு தக்காளி, குடைமிளகாய் சேர்த்து நன்றாக கிளறவும்.
பிறகு மிளகாய் தூள், சீரகப் பொடி மற்றும் சிறிதளவு தண்ணீர் தெளித்து 2 நிமிடம் வேக வைத்து இறக்கினால் சுவையான குடைமிளகாய் முட்டை பொரியல் தயார்.
Leave a comment