பொதுவாக நம்மில் சில வீடுகளில் பறவைகள் வளர்ப்பதுண்டு.
சிலர் வீட்டில் வளர்க்கும் பறவைகளின் எச்சத்தால் மனிதர்களுக்கு நோய்கள் பரவும் என்று கூறுகின்றனர்.
உண்மையில் இது உண்மையாக இல்லையா என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.
நோய் பரவுவது உண்மையா?
செல்ல பறவைகளின் வயிற்றில் சால்மோனெல்லா என்னும் நுண்ணுயிரிகள் உள்ளன.
குறிப்பாக அவற்றின் எச்சத்தை தவறுதலாக மனிதன் உண்ணும் போதோ, உணவில், குடிநீரில் கலக்கும் போதோ டைபாய்டு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனால் மனிதர்களில் குறிப்பாக குழந்தைகளுக்கு பேதி, உடல் வெப்பம் அதிகரிப்பது, வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்படுகின்றது என்று கூறப்படுகின்றது.
கிளமைடோபைலா சிட்டாஸி நுண்ணுயிரியால் உண்டாகும் சுட்டகோஸிஸ் என்னும் நோய், கிளி, மக்காவ்(Macaw), காக்கடைல்(Cockatiel) போன்ற பறவைகள் மூலம் பரவும் நோய்களாகும்.
செல்ல பறவைகளின் உலர்ந்த எச்சமானது, காற்றிலுள்ள தூசியில் கலந்து மனிதனுக்கு பரவுகிறது. இதனால் உடல் வெப்பம், தலைவலி, உடல் வலி மற்றும் வறண்டு இருமல் ஏற்படும்.
எனவே செல்ல பறவை வளர்ப்பில் கவனம் செலுத்துவது அவசியமாகும். தற்போது அவற்றை தெரிந்து வைத்து கொள்ளுவோம்.
செல்ல பறவை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை
- பறவைகளின் கூண்டு, உணவு பாத்திரம் மற்றும் எச்சத்தை கையாளும் போது கைகளை நன்றாக சுத்தமாக கழுவ வேண்டும்.
- கூண்டுகளை காற்றோட்டமுள்ள இடங்களில் வைக்க வேண்டும். புகை மிகுந்த மற்றும் உருவாகக்கூடிய சமையலறையில் வைக்கக்கூடாது.
- பறவைகளை முத்தமிடுதல், முகத்திற்கு அருகில் வைத்து கொஞ்சுதல் கூடாது.
- பறவைகளுக்கு தேவையான உணவு மற்றும் நீரை அளிக்க வேண்டும்.
- கூண்டில் உள்ள எச்சம் மற்றும் உண்ணாமல் விட்ட உணவுகளை நீண்ட நேரம் அப்படியே வைக்காமல் உடனுக்குடன் அகற்றுதல் அவசியம்.
#LifeStyle
Leave a comment