1847477 pakora
சமையல் குறிப்புகள்பொழுதுபோக்கு

பிரெட் பக்கோடா

Share

தேவையான பொருட்கள்

பிரெட் – 5 துண்டு
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 4
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
கடலை மாவு – 4 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை
காய்கறி – கால் கப்

செய்முறை

ஒரு வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும். சீரகத்தை கொரகொரப்பாக பொடித்துகொள்ளவும். காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மிக்ஸியில் பிரெட் துண்டுகளை பிய்த்து பிய்த்து போட்டு அதனுடன் பெரிய வெங்காயம், 4 பச்சை மிளகாயை நறுக்கி சேர்த்து கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், உப்பு, மஞ்சள் தூள், சீரகம், கடலை மாவு, பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் பொடியாக நறுக்கிய காய்கறிகளை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து நன்கு கெட்டியாக உருண்டை பிடிக்கும் அளவிற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

பக்கோடா மாவு பதம் வந்த பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மீடியம் பிளேமில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக பக்கோடா மாவை எடுத்து போட்டு எல்லா பக்கமும் பொன்னிறமாக சிவக்க வறுத்து எடுக்க வேண்டும்.

ரொம்ப ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய இந்த பிரெட் பக்கோடா எண்ணெய் குடிக்காது. சாதாரண வெங்காய பக்கோடாவை விட கூடுதல் சுவையுடன் நிச்சயம் இருக்கும்.

சட்டென ஐந்தே நிமிடத்தில் செய்யக்கூடிய இந்த பிரட் பக்கோடா டொமேட்டோ சாஸ் உடன் தொட்டு கொண்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். மாலையில் டீயுடன் சாப்பிடலாம் வயிறு நிறைவாக இருக்கும்.

#LifeStyle

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
maxresdefault 1
பொழுதுபோக்குசினிமா

ஜனவரி 10-ல் வெளியாகிறது சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’: அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் செய்யப்பட்டு, தற்போது...

NTLRG 20251221151537002136
பொழுதுபோக்குசினிமா

2025-ன் டாப் 10 தமிழ் ட்ரெய்லர்கள்: 54 மில்லியன் பார்வைகளுடன் ‘கூலி’ முதலிடம்!

2025-ஆம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு ஒரு பிரம்மாண்டமான ஆண்டாக அமைந்துள்ளது. சூப்பர்ஸ்டார்கள் மற்றும் இளம் நட்சத்திரங்களின்...

ajith racer 2025 10 05 19 53 41
பொழுதுபோக்குசினிமா

அஜித்தின் ரேஸிங் வாழ்க்கையை ஆவணப்படமாக்கும் இயக்குநர் ஏ.எல். விஜய்!

திரையுலகைத் தாண்டி சர்வதேச கார் பந்தயங்களில் (Car Racing) தடம் பதித்து வரும் நடிகர் அஜித்குமாரின்...

image 42fd4006b9
பொழுதுபோக்குசினிமா

விபத்திலும் குறையாத வேகம்: மூளை அதிர்ச்சியையும் மீறி மேடையேறிய நடிகை நோரா ஃபதேஹி!

பாலிவுட்டின் பிரபல நடிகையும் நடனக் கலைஞருமான நோரா ஃபதேஹி, மும்பையில் நடைபெற்ற இசைத் திருவிழாவிற்குச் செல்லும்...