24 671c9d20e344a
சினிமாபொழுதுபோக்கு

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் பெண் போட்டியாளர்..உறுதிப்படுத்திய கடந்த சீசன் போட்டியாளரின் தந்தை

Share

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் பெண் போட்டியாளர்..உறுதிப்படுத்திய கடந்த சீசன் போட்டியாளரின் தந்தை

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

பெண்கள் மற்றும் ஆண்கள் என இரண்டு பக்கமாக பிரித்து நடத்தப்படும் இந்த சீசனில் முதல் வாரம் மக்களிடம் இருந்து குறைவான வாக்குகளை பெற்று ரவீந்தர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.

ரவீந்தரை தொடர்ந்து இரண்டாவது வாரத்தின் இறுதியில் அர்னவ் வெளியேற்றப்பட்டார். இதுவரை வெளியேறிய இருவரும் ஆண்கள் அணியினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரம் முத்துக்குமரன், அருண், சௌந்தர்யா, அன்ஷிதா, சத்யா, தர்ஷா குப்தா, ஜாக்குலின், பவித்ரா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ள இருந்த நிலையில், போட்டியாளர்களில் யார் வெளியேறப்போகிறார் என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

நாமினேட் ஆகியுள்ள 7 போட்டியாளர்களில் ஜாக்குலின், அன்ஷிதா அல்லது தர்ஷா குப்தா இந்த மூவரில் ஒருவர் வெளியேற வாய்ப்புள்ளது என கூறப்பட்டது.

இந்நிலையில், இந்த வாரம் தர்ஷா குப்தா வெளியேற போவதாக கூறி போன சீசன் போட்டியாளராக இருந்த ஐஷுவின் அப்பா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” தைரியமாக இரு தர்ஷா உன் எதிர்காலத்திற்கு எனது வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...