பிக்பாஸ் 7இன் வெற்றியாளராக அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என பிரபல இந்திய ஊடகமாக விகடன் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 7 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது.
இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளன, ஏழாவது சீசனின் இறுதிப் போட்டி நாளை இடம்பெறவுள்ளது. இந்த சீசனில் 20க்கும் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
போட்டியில் இருந்து மக்கள் வாக்கெடுப்பு மூலம் பலரும் வெளியேற்றப்பட்ட நிலையில், இறுதிப் போட்டியாளர்களாக விஷ்ணு விஜய், தினேஷ், மணி, அர்ச்சனா மற்றும் மாயா ஆகிய ஐவர் உள்ளனர்.
இறுதிப் போட்டியில் மாயா மற்றும் அர்ச்சனா ஆகியோருக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அர்ச்சனா டைட்டில் வெற்றிபெறுவார் என்று இணையத்தில் தகவல்கள் வைரலாகியிருந்தது.
அதனை உறுதிப் படுத்தும் வகையில் பிக்பாஸ் 7இன் வெற்றியாளராக அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என பிரபல இந்திய ஊடகமாக சினிமா விகடன் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது.
ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து கிடைத்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலின்படி இந்த சீசனின் டைட்டில் வின்னராகத் அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் மணி சந்திரா இரண்டாம் இடமும், மாயா மூன்றாம் இடமும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.