Bigg Boss Tamil 7- பிக்பாஸ் 7 ஓபனாக சொன்ன பூர்ணிமா ரவி
பிக்பாஸ் 7 வீட்டுக்குள் இரண்டாவது போட்டியாளராக யூட்யூபர் பூர்ணிமா ரவி சென்றார். பிக்பஸ் ஏழாவது சீசன் எதிர்பார்ப்புடன் இன்று கோலாகலமாக தொடங்கியது. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் கமல் ஹாசன் தனது வீட்டிலிருந்து பிக்பாஸ் செட்டுக்கு காரில் சென்றார். சிகப்பு கலர் கோட் சூட்டில் படு கலக்கலாக கமல் ஹாசன் பிக்பாஸ் செட்டுக்குள் எண்ட்ரி கொடுத்தார். அத அந்த சமயத்தில் ரசிகர்களை கவரும்படியான ஒரு ஸ்க்ரிப்ட்டை பிக்பாஸ் குழுவினர் செய்திருந்தனர்.
இந்த பிக்பாஸ் சீசன் இரண்டு வீடுகளில் நடைபெறவிருக்கிறது. இரண்டு கன்ஃபெஷன் ரூம்கள் தனித்தனியாக கொடுக்கப்பட்டிருக்கின்றன. கிச்சன் பொதுவாக கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதில் முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் வீட்டுக்குள் நுழைந்தார். அடுத்ததாக பூர்ணிமா ரவி வீட்டுக்குள் நுழைந்தார். பூர்ணிமா பேச்சு: பூர்ணிமா தொடர்பான வீடியோவில் பேசிய அவர் ” ஐடி கம்பெனியில் வேலை பார்த்துவிட்டு யூட்யூபராக இருந்தேன். 9 டூ 5 வேலை எனக்கு பிடிக்கவில்லை. பிறகுந் அடிப்பை தேர்ந்தெடுத்தேன். இடையில் டிஜிட்டல் முகமாக இருந்தேன் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். கொஞ்சம் எமோஷனலான ஆளும்கூடத்தான் நான். எனது அம்மாவை இரிட்டேட் செய்வது எனக்கு பிடிக்கும். என் அண்ணன் எனது கரியருக்கு ரொம்பவே சப்போர்ட்டா இருப்பார். அப்பா எனக்கு பிடித்ததை செய்ய சொல்வார்.
எனக்கு நிறைய மக்களை சந்திக்க பிடிக்கும். அவர்களை பற்றி தெரிந்துகொள்வதற்கான ஆவல். பிக்பாஸ் குறித்து ஏற்கனவே எனக்கு பெரிய கேள்விகள் இருக்கின்றன. அதை எக்ஸ்ப்ளோர் செய்வதற்காக பிக்பாஸுக்கு வந்திருக்கிறேன். எனது பலமும் பலவீனமும் வாய்தான். ஒரு தவறு செய்தால் திருத்திக்கொள்வேன். எனவே நான் பெரிதாக பயப்படமாட்டேன். நான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வரும்போது நல்ல நண்பர்கள் மற்றும் அனுபவத்தோடு வெளியே வர விரும்புகிறேன். நான் சிங்கிளாகத்தான் இருக்கிறேன். யாருக்கேனும் விருப்பம் இருந்தால் மிங்கிளாகுங்கள்” என்றார்.
பூர்ணிமா ரவி: வீட்டுக்குள் நுழைந்ததும் கூல் சுரேஷும் பூர்ணிமா ரவியும் தங்களுக்குள் அறிமுகம் செய்துகொண்டனர். அப்போது கூல் சுரேஷிடம் பூர்ணிமா ரவி, “நீங்கள் என்னை ஏற்கனவே பார்த்திருக்கிறீர்கள். ஒருமுறை எனது காரை வழிமறித்து பேசினீர்கள். நான் உங்களால் பாதிக்கப்பட்டவர் என்று சொல்லிவிட்டு இல்லை இல்லை சும்மா ஃபன்னுக்கு சொன்னேன் அண்ணா என கூறினார். பிறகு இரண்டு பேருமே வீட்டை சுற்றி பார்த்தனர். பிறகு இரண்டு பேரில் யார் கேப்டனாக இருக்கலாம் என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். இரண்டு பேருமே விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க ஒருகட்டத்தில் கூல் சுரேஷ் தனது கேப்டன் பதவியை பூர்ணிமாவுக்கு விட்டுக்கொடுத்தார்.
- bigg boss
- bigg boss 7
- bigg boss 7 promo
- bigg boss 7 tamil
- bigg boss 7 tamil contestant
- bigg boss 7 tamil contestants
- bigg boss 7 tamil contestants list
- bigg boss 7 tamil launch date
- bigg boss 7 tamil promo
- bigg boss promo
- bigg boss season 7
- Bigg Boss season 7 tamil
- bigg boss season 7 tamil contestants
- bigg boss season 7 tamil promo
- bigg boss tamil
- bigg boss tamil 6
- bigg boss tamil 7
- bigg boss tamil promo
- bigg boss tamil season 7
Comments are closed.