விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று ஒளிபரப்பாகி வருகின்றது. இதன் ஒன்பதாவது சீசன் எதிர்வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி ஆரம்பமாக உள்ளது.
பிக்பாஸ் எட்டாவது சீசனில் டைட்டில் வின்னர் ஆக முத்துக்குமரன் வெற்றி பெற்றார். விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய இந்த சீசன் தொடர்பான எதிர்பார்ப்புகள் மேலும் அதிகரித்துள்ளன. இந்த 9வது சீசனுக்கு ‘ஒண்ணுமே புரியல’ என்ற தலைப்பு வைக்கப்பட்டு ப்ரோமோக்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில், பிக்பாஸ் ஒன்பதாவது சீசனில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை விரிவாக பார்ப்போம்.
நாம் இருவர் நமக்கு இருவர், இதயம் போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஜனனி அசோக்குமார். இவர் இந்த சீசனில் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.
சமூக வலைத்தள பக்கங்களில் பலூன் அக்கா என பிரபலமான மாடல் நடிகை அரோரா சின்க்ளேர் இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொள்ள உள்ளது உறுதி என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அகமது மிரான் தற்போது போட்டியாளராக களம் இறங்குகின்றார் என கூறப்படுகின்றது.
விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா தொடர் மூல பிரபலமான ஃபரினா ஆசாத் இந்த சீசனில் களமிறங்க உள்ளார். இவர் குக் வித் கோமாளி சீசன் ஐந்திலும் பங்கேற்றவர்.
குக் வித் கோமாளி சீசன் 2, ராஜா ராணி சீரியல் போன்றவற்றில் நடித்து பிரபலமானவர் அஸ்வின் குமார். இவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உண்டு . இவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகின்றாராம்.
இந்த முறை விஜே பார்வதியும் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்கப் போகின்றாராம். இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பதோடு இவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் காணப்படுகிறது.
சமூக ஊடகங்களில் பிரபலமான நடனக் கலைஞர் மற்றும் நடன ஆசிரியரான சிந்தியா வினோலின் இந்த சீசனில் பங்கேற்க உள்ளார். இவர் தாண்டி மாஸ்டரின் நெருங்கிய உறவுக்கார பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
குக் வித் கோமாளி மூலம் பிரபலமானவர் டாலி. இவரும் இம்முறை பங்கேற்க உள்ளாராம்.
பாக்கியலட்சுமி மூலம் தனக்கென மிகப் பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் நேகா. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் பங்கேற்கப் போகின்றாராம்.
சரவணன் மீனாட்சி சீசன் 2 வில் அறிமுகமான சித்தார்த் குமரன், தேன்மொழி பி. எ, ஈரமான ரோஜாவே 2, யாரடி நீ மோகினி போன்ற பல சீரியல்களில் நடித்து பிரபலமானார். இவரும் இந்த சீசனில் பங்கேற்க உள்ளார்.
இதயம் சீரியலில் நடித்த புவியரசு, நகைச்சுவை நடிகரான ராஜவேலு மற்றும் ராஜா ராணி தொடரில் நடித்து பிரபலமான சின்னத்திரை நடிகர் சித்து ஆகியவர்களும் இந்த சீசனில் பங்கேற்க உள்ளனர். இதனால் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என கூறப்படுகிறது.
இறுதியில் இசையமைப்பாளர் தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவாவும் இந்த முறை களமிறங்க உள்ளார் என கூறப்படுகின்றது.