rtjy 323 scaled
சினிமாபொழுதுபோக்கு

பிக்பாஸ் சீசன் 7; போட்டியாளர்கள் லிஸ்ட்!

Share

பிக்பாஸ் சீசன் 7; போட்டியாளர்கள் லிஸ்ட்!

பிக்பாஸ் சீசன் 7′ நிகழ்ச்சி, அக்டோபர் முதலாம் திகதி அதாவது நாளை துவங்க உள்ள நிலையில், நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் 7 பிரபலங்களின் தகவல்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இதனை உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்க உள்ளார்.

நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே, இந்த சீசனில் யார் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்வார்கள்? என்கிற மிகப்பெரிய லிஸ்ட்டே யூகத்தின் அடிப்படையில் சமூக வலைதளத்தில் அவ்வபோது வெளியாகி வந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க, இன்னும் ஒரே ஒரு நாளே உள்ள நிலையில் 7 எதிர்பாராத பிரபலங்கள் பற்றிய தகவல் தான் தற்போது வெளியாகி உள்ளது.

கூல் சுரேஷ்

கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக, தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் நடித்து பிரபலமானவர் கூல் சுரேஷ். சமீப காலமாக பல சர்ச்சைகளில் சிக்குவதை வழக்கமாக வைத்துள்ளார். இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வர உள்ளதாக கூறப்படுகிறது. ஆக கண்டென்ட்டுக்கு இந்த சீசனில் குறைவிருக்காது.

பவா செந்தில்துரை

பிரபல நாளிதழில் எழுத்தாளராக பணியாற்றிய பவா செந்தில்துரை பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

அனன்யா ராவ்

அனன்யா ராவ் சில விளம்பரங்களில் மாடலாக நடித்துள்ளார்.

இவர் முதல் சீசனில் இருந்தே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வருவதாகவும், தற்போது மாடல் என்கிற அடிப்படையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிகிறது.

ஐஷு

இவர் பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளரான, அமீரை எடுத்து வளர்த்த தம்பதிகளின் மகள் ஆவார். நடனத்தில் ஆர்வம் கொண்ட இவர், தற்போது திரையுலகில் வாய்ப்பு தேடி வரும் நிலையில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை அதற்கான தளமாக இருக்கும் என்கிற நம்பிக்கையில் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது.

அக்ஷயா உதயகுமார்

அக்ஷயா உதயகுமார் ஹீரோயின் வாய்ப்புக்கு அடி போட்டு வருகிறார். இந்நிலையில் இவர் இதற்கான வழியாக தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தயாராகி உள்ளார். ‘லவ் டுடே’ படத்தில், இவானாவின் தங்கையாக நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாண்டியன் ஸ்டோர் சரவணன்

பாண்டியன் ஸ்டோர் சீரியலில், கடைசி தம்பியாக நடித்து வருபவர் சரவணன். திரைப்படங்கள் நடிக்க வாய்ப்பு தேடி வரும் இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

விஷ்ணு​

சத்யா சீரியலில் நடித்தது மூலம் பிரபலமான விஷ்ணுவுக்கு பிக் பாஸ் வீட்டில் தங்க வேண்டும் என்பது பல ஆண்டு கனவு. ஒவ்வொரு ஆண்டும் முயற்சி செய்தும் பிக் பாஸின் பார்வை விஷ்ணு மீது படவே இல்லை. இந்நிலையில் அவரின் விடாமுயற்சிக்கு கை மேல் பலன் கிடைத்துவிட்டதாம்.

ரோபோ சங்கர் மகள் – வனிதா மகள்

இவர்களுடன் ரோபோ சங்கர் மகள், மற்றும் வனிதா விஜயகுமார் மகளும் பிக்பாச் நிகழ்ச்சியில் கலந்துகொள்லவுள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள உள்ளதாக ஏற்கனவே பல பிரபலங்களின் பெயர்கள் சமூக வலைதளத்தில் அடிபட்டு வரும் நிலையில், யாரெல்லாம் கலந்து கொள்வார்கள் என்பது நாளைய தினமே தெரியவரும்.

அதுமட்டுமல்லாது இதற்கு முந்தைய நிகழ்ச்சிகளில் இலங்கை தமிழர்களும் உள்வாங்கப்பட்ட நிலையில் இம்முறையும் இலங்கையர்கள் கலந்துகொள்கின்றார்களா என்கின்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

மேலும் இம்முறை பிக்பாஸ் வீடு இரண்டாக உள்ளதாக கமல் ஹாசன் தெரிவித்துள்ள நிலையில், நிகழ்ச்சியை காண பிக்பாஸ் ரசிகர்களின் ஆர்வமும் அதிகமாகவே உள்ளது.

Share
தொடர்புடையது
9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...

6 2
சினிமாசெய்திகள்

6 நாட்களில் மார்கன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த...