பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்றைய 24 மணி நேர எபிசோடில் மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் பேசிக்கொண்டிருந்த வீடியோஸ் இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் பேச்சு வாக்கில் பூர்ணிமா நான் ஒன்னும் உத்தமின்னு சொல்லல ஆனா இங்கே சிலர் என்னைவிட மோசமான நடிச்சுக்கிட்டு இருக்காங்க என்று பேசி இருக்கிறார். இதை வைத்து சில நெட்டிசன்கள் பூர்ணிமாவை திட்டி வருகிறார்கள்.
அதோடு கடந்த வாரத்தில் பூர்ணிமா வெளியே போன பிறகு மாயா அதிகமாக பிக் பாஸ் வீட்டிற்குள் அர்ச்சனாவோடு இருந்த நிலையில் இப்போது மீண்டும் தன்னுடைய தோழிகள் எல்லோரும் வந்து விட்ட நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த ஒரு சிலர் என்னை ரொம்பவே யூஸ் பண்ணிக்கிட்டாங்க என்று மாயா குற்றம் சாட்டியிருப்பதால் அது குறித்தும் நெட்டிசன்கள் கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.
ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வெளியே என்ன நடக்கிறது என்பதை உள்ளிருக்கும் போட்டியாளர்களிடம் சொல்லக்கூடாத என்று விதிமுறை இருக்கிறது. ஆனால் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்கு கெஸ்ட் ஆக வந்த எலிமினேஷன் போட்டியாளர்கள் மீறி இருக்கிறார்கள்.. அதிலும் பூர்ணிமா முழுமையாக மீறி இருக்கிறார். ஆனால் அதை பிக் பாஸும் கவனிக்க மறந்து இருக்கிறார்கள் என்பது பலருடைய குற்றச்சாட்டாக இருக்கிறது. என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி நாளையோடு முடிவடைய இருக்கிறது. இன்னும் ஒரு சில மணி நேரத்தில் இந்த சீசன் டைட்டில் வின்னர் யார் என்ற ரகசியங்கள் இணையத்தில் கசிந்து விடும். இன்று நாளை நிகழ்ச்சிக்கான சூட்டிங் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் நேற்று நடந்த சில நிகழ்வுகள் இணையத்தில் வீடியோவாக வெளியாகி இருக்கிறது.
அந்த வகையில் இந்த சீசனில் கலந்து கொண்டு எலிமினேஷன் ஆகி வெளியே போன போட்டியாளர்கள் மீண்டும் இந்த வாரம் முழுக்க பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கெஸ்ட் ஆக வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் பூர்ணிமாவும் வீட்டிற்குள் வந்திருக்கிறார். பூர்ணிமா பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததும் எல்லோரிடமும் சகஜமாக பேசி பழகி இருந்தார். ஆனால் அவருடைய உயிர் தோழியான மாயாவிடம் கொஞ்சம் கூடுதலாக ரகசியங்களை கொட்டத் தொடங்கி விட்டார்.
வெளியே தனக்கு கிடைத்த வரவேற்பு அதுபோல தங்கள் இருவரை பற்றி வெளியே பரவி ஒரு மீம்ஸ்கள் குறித்தும் பூர்ணிமா சொல்ல அதை எல்லாம் கேட்டு மாயா அப்படியா என்று வியந்து கேட்டுக் கொண்டிருந்தார். அதோடு நீங்க கஷ்டப்பட்டதெல்லாம் நிறைவேறிட்டு உங்களுக்கு இனி திரைப்பட வாய்ப்புகள் கொட்ட போகிறது என்றும் பூர்ணிமா சொல்லிக் கொண்டிருந்தார். அதுபோல பூர்ணிமா வெளியே போனதும் மாயா அர்ச்சனாவோடு நெருங்கி பழகி வந்தது குறித்து கேள்வி கேட்டிருந்தார்.
அதுவும் பூர்ணிமாவே மாயாவிடம் உரிமையாக கேள்வி கேட்டதால் மாயாவுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் உளறிக் கொண்டிருந்ததையும் பார்க்க முடிந்தது. அதாவது பூர்ணிமா மாயாவிடம் இத்தனை நாட்களாக இந்த வீட்டிற்குள் வந்த நாளிலிருந்து அர்ச்சனா நடிச்சுக்கிட்டு இருந்திருக்காங்க. அது வெளிய அப்பட்டமா தெரிஞ்சது. நம்ம ரெண்டு பேரும் தான் நார்மலா எப்படி ரெண்டு பொண்ணுங்க பேசிகிட்டு இருப்பாங்களோ அந்த மாதிரி பேசிக்கிட்டு இருந்து இருக்கோம்
நம்ம எந்த இடத்திலும் கேமரா இருக்கிறதை ஞாபகம் வச்சுக்கவே இல்ல. சகஜமா நாம பேசி பழகினது மக்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ் நம்மளுக்கு கிடைச்சிருக்கு என்று பேசிக் கொண்டிருக்கும்போது பேச்சு வாக்கில் நான் ஒன்னும் உத்தமின்னு சொல்லல, ஆனா உள்ளே சிலர் நடிச்சிட்டு இருக்காங்க. ஆனா அந்த நடிப்போட நீங்களும் நான் வெளியே போனதும் அவங்க கிட்ட சேர்ந்துட்டீங்களே என்று அர்ச்சனா குறித்து பெயரை சொல்லாமல் பேசிக் கொண்டிருக்க,
அதை தெரிந்து கொண்ட மாயா நான் வேணுன்னு எல்லாம் பேசல. ஆனா நீங்க இந்த நிகழ்ச்சியில் இருந்து போன பிறகு என்ன சிலர் நல்லா பயன்படுத்திகிட்டாக…. நானும் அவங்களோட நடிப்பை உண்மைன்னு நம்பிட்டேன்…. என்று விளக்கம் கொடுத்து கொண்டு இருக்கிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகிறது.
- archana
- bb 7 tamil
- bigg boss
- bigg boss 7 tamil
- bigg boss 7 tamil day 102
- bigg boss 7 tamil full episode
- bigg boss 7 tamil promo
- bigg boss 7 tamil today episode
- bigg boss season 7
- Bigg Boss season 7 tamil
- bigg boss tamil
- bigg boss tamil 7
- bigg boss tamil season 7
- bigg boss tamil season 7 full episode
- bigg boss tamil season 7 live
- bigg boss tamil season 7 today episode
- bigg boss unseen tamil season 7
- Biggbos Tamil7 Title Winner And 50 Lakhs Taker
- kamal haasan
- Maya S Krishnan
- Star Vijay
- Tamil
- tamil shows
- tamil tv