Bigg boss season 7: கமல்சாருக்குமா இது தெரியல? – பிக்பாஸை பிரித்து மேய்ந்த ரேகா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் ஏன் பங்கேற்கவில்லை என்பது குறித்து ரேகா நாயர் பேசி இருக்கிறார்.
இது குறித்து குழுதம் யூடியூப் சேனலுக்கு அவர் பேசும் போது, “முதலில் நான் ஏன் நூறு நாட்கள் அங்கு சென்று இருக்க வேண்டும். எனக்கு பிடித்த இடத்தில் என்னால் நூறு என்ன, ஆயிரம் நாட்கள் கூட இருக்க முடியும். எனக்கு பிடித்த உணவு இருக்கிறது. அதை 100 நாட்கள் சாப்பிட வேண்டும் என்றால் நான் சாப்பிடுவேன். ஆனால் பணத்திற்காக, பிரபலத்திற்காக அங்கு செல்வது சரி என்று எனக்கு பட வில்லை.
அதற்கு 100 செடி வைத்தால், என்னுடைய வாரிசுகளாவது நன்றாக இருக்கும். முதல் சீசனில் எனக்குத் தெரிந்தவர்கள் சென்றாகள். அவர்களிடமே இதெல்லாம் ஒரு பொழப்பா என்று கேட்டேன். இந்த மாதிரியான விஷயங்களில் எனக்கு ஈடுபாடு இல்லை. முதல் சீசனில் அவர்கள் என்னை,என்னையாக காண்பித்தார்கள்.
ஆனால், இப்போது அவர்கள் முழுக்க முழுக்க அந்த நிகழ்ச்சியை ஸ்கிரிப்ட்டாக மாற்றி விட்டார்கள். அவர்கள் சொன்ன படி நான் நடிப்பதற்கு பதிலாக சீரியலில் நடித்துவிட்டு சென்று விடுவேன். சரி, நான் கேட்கிறேன். பிக் பாஸூக்குள் சென்றால் என்னை என்ன ரஜினி சாரின் ஹீரோயினாக கூப்பிட்டு விடுவார்களா?
ஒருவருக்கு அறிவில்லை என்றால்தான், பள்ளியில் சென்று விட வேண்டும். நடிக்கவே தெரியவில்லை என்றால்தான், உங்களை ஆக்டிங் ஸ்கூலில் சென்று விட வேண்டும். இல்லை, ஒரே நாளில் பிரபலமாக வேண்டும் என்றால் அங்கு செல்லலாம்.
அதற்கு பதிலாக, இங்கு இருந்து 100 நாட்கள் 100 விஷயங்களை கற்றுக்கொள்ளுங்கள். வித்தியாசமான மனிதர்களை சந்தியுங்கள். ஜெயிலில் இருப்பதும், அங்கு இருப்பதும் என்னைப் பொருத்த வரை ஒன்றுதான். எனக்கு இங்கு ஓரளவிற்கு பிரபலம் இருக்கிறது. அங்கு குறைந்த ஊதியம் கொடுத்து, அதிக வேலை வாங்குகிறார்கள். பிக்பாஸ், கமல்ஹாசன் என்ற மிகப்பெரிய பிரபலத்தை வியாபாரத்தின் உச்சியாக வைத்து, அவரையும் வியாபாரம் பேசுகிறது. அவருக்கும் அது தெரியவில்லையா என்பது தெரியவில்லை. அவர் இதை செய்ய மாட்டேன் என்று சொல்லி இருக்க வேண்டும்.” என்று பேசினார்.
- bigg boss
- bigg boss 7
- bigg boss 7 promo
- bigg boss 7 tamil
- bigg boss 7 tamil contestant
- bigg boss 7 tamil contestants
- bigg boss 7 tamil contestants list
- bigg boss 7 tamil launch date
- bigg boss 7 tamil promo
- bigg boss promo
- bigg boss season 7
- Bigg Boss season 7 tamil
- bigg boss season 7 tamil contestants
- bigg boss season 7 tamil promo
- bigg boss tamil
- bigg boss tamil 6
- bigg boss tamil 7
- bigg boss tamil promo
- bigg boss tamil season 7