tamilnaadic scaled
சினிமாபொழுதுபோக்கு

மாயாவுக்கு அடித்த ஜாக்பாட்.. வெளியே வந்தால் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

Share

பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளரான மாயா ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் போட்டியாளர்கள் சினிமாவில் பல துறைகளில் சாதித்து வருகின்றனர். பிக்பாஸிற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இதில் வரும் போட்டியாளர்கள் மக்களின் மனம் கவர்ந்து சினிமா துறையில் சாதித்து வருகின்றனர். அப்படி தான் கவின், முகின் என ஏராளமான நடிகர்கள் தற்போது கதாநாயகனாக அறிமுகமாகி அசத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது பிக்பாஸ்7வது சீசன் நடைபெற்று வருகிறது. பைனல்ஸுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், 5 போட்டியாளர்கள் தற்போது டாப் 5 பைனலிஸ்ட்டாகவுள்ளனர். அதில் ஒரு போட்டியாளர் தான் மாயா. விக்ரம் படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் ஒரு சீனில் நடித்து மிகவும் பிரபலமானவர் மாயா. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு வெளியான வானவில் வாழ்க்கை என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் 2018ஆம் ஆண்டு ரஜினியின் 2.0 படத்திலும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இந்த நிலையில் மாயா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மாவீரன், ஜவான் ஆகிய படங்களில் ஆக்‌ஷன் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த யானிக் பென் என்பவரின் இயக்கத்தில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. இந்த படத்தில் மாயா ஆக்‌ஷன் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸில் மாயா எண்டெர் ஆன பிறகு மாயா ஃப்ல்ளிப் செய்த வீடியோக்களும், பாக்ஸிங் செய்யும் வீடியோக்களும் வெளியாகி கவனம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

Untitled 26
பொழுதுபோக்குசினிமா

விஜய் எனது தம்பி; ஆனால் போட்டி திமுக – அதிமுக இடையேதான்: சுந்தர் சி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது...