வெளியேறப் போகும் 2 பேர்,இறுதி கட்ட பரபரப்பில் பிக்பாஸ் வீடு

Rasi palan30 1

பிக் பாஸ் சீசன் 7 ஒரு வழியாக இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. கடந்த வாரம் சரவண விக்ரம் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இந்த வாரம் டிக்கெட் 2 பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் யார் வெல்ல போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இப்போது அதிகமாக இருக்கிறது.

தற்போதைய நிலவரப்படி விஷ்ணு தான் முதலிடத்தில் இருக்கிறார். ஆனால் இந்த டாஸ்க் இன்று இரவு அல்லது புதன்கிழமை வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த வாரம் இரண்டு பேரை வெளியேற்றவும் பிக் பாஸ் குழு திட்டமிட்டு இருக்கிறது.

அதன்படி கடைசி இரண்டு இடங்களில் இருக்கும் ரவீனா, நிக்சன் இருவரும் இந்த வாரம் அடுத்தடுத்து வீட்டை விட்டு வெளியேற உள்ளனர். அதற்கு அடுத்த வாரம் போட்டிகள் இன்னும் கடுமையாக்கப்பட இருக்கிறது.

அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவருக்கு ஃபினாலே டிக்கெட் வழங்கப்படும். இப்படியாக பிக் பாஸ் வீடு இறுதி கட்ட பரபரப்பில் இருக்கிறது. ஆனாலும் வழக்கம் போல போட்டியாளர்கள் தங்களுக்காக விளையாடாமல் மற்றவர்களை தோற்கடிக்கும் நோக்கில் தான் இருக்கின்றனர்.

அதிலும் இந்த வாரம் மாயா கேங் ஏகப்பட்ட தில்லுமுல்லு வேலைகளை செய்தனர். அதை கமல் தட்டிக் கேட்க வேண்டும் என ரசிகர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். அந்த வகையில் ஆண்டவர் அநியாயத்தை தட்டி கேட்பாரா? அல்லது வழக்கம்போல் சப்பை கட்டு கட்டுவாரா? என்பது தெரியும்.

Exit mobile version