tamilni 327 scaled
சினிமாபொழுதுபோக்கு

மனமுடைந்து நிற்கும் பிக்பாஸ் தினேஷ்

Share

மனமுடைந்து நிற்கும் பிக்பாஸ் தினேஷ்

பிக் பாஸ் தினேஷ் வெளியேறியவுடன் கொடுத்த முதல் பேட்டியில், அடுத்த வாழ்க்கைக்கு தயாராகவிருப்பதாகவும் ரச்சிதா எடுத்திருக்கும் முடிவை மாற்றமுடியவில்லை எனவும் கூறியுள்ளார்.

கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு மேலாக கணவன் மனைவியாக இருந்து வந்தவர்கள், கடந்த இரண்டு வருடங்களாக பிரிந்து வாழ்கின்றனர்.

இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்கின்றனர். ரச்சிதாவின் கணவனான தினேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7 ஆவது சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்துக்கொண்டார்.

போட்டிக்கு செல்லும் முன்பும் சென்ற பிறகும் தனது மனைவியுடன் இணைந்து வாழ வேண்டும் என்றே கூறிக்கொண்டு இருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வென்று தினேஷ் கப்பை வென்று ரச்சிதாவின் கையில் கொடுக்க வேண்டும் என கூறியே போட்டியில் கலந்துக்கொண்டார். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.

ரச்சிதாவிற்கு அவருடன் இணைந்து வாழ விருப்பம் இல்லை. தினேஷ் கலந்து கொண்ட பிறகு அவர் தொடர்பாக எதிர்மறையான கருத்துகளை தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்துக்கொண்டு இருந்தார்.

இந்நிலையில் வெளியேறிய தினேஷின் முதல் பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“நான் உள்ளே செல்லும் போது எப்படியாவது என்னுடைய வாழ்க்கை சரியாக விடும் என்ற நம்பிக்கையில் தான் சென்றேன். டைட்டில் வென்று எப்படியாவது வாழ்க்கையை மீண்டும் வாழ நினைத்தேன். ஆனால் வெளியே வந்து பார்த்தால் எந்த இடத்தில் இருந்ததோ அதே மாதிரி தான் இருகிறது.

இதற்கு பிறகும் ரச்சிதா மனம் மாறுவார் என தெரியவில்லை. அவர் ஒரு சுவற்றை கட்டி அந்த சுவற்றுக்குள்ளே இருகிறார். அதை உடைக்க என்னால் முடியவில்லை.

இனி நான் அடுத்த வாழ்க்கையை நோக்கி பயணத்தை தொடர போகிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதை பார்த்த அவருடைய ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். இனிமேல் உங்கள் வாழ்க்கையில் கவனம் செலுத்துங்கள். உங்களை வேண்டாம் என நினைப்பவர்களை நினைத்து கூட பார்க்க வேண்டாம் என கூறி வருகின்றனர்.

Share
தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...