20 1
சினிமாபொழுதுபோக்கு

சீரியல் நடிகருக்கு ஜோடியாக புதிய படத்தில் கமிட்டாகியுள்ள பிக்பாஸ் புகழ் இலங்கை பெண் ஜனனி

Share

வெள்ளித்திரைக்கு இப்போது மிகவும் திறமையான கலைஞர்களை அதிகம் களமிறக்கி வருகிறது சின்னத்திரை.

சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் பலரும் தங்களது திறமைகளை காட்ட வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்க கலக்குகிறார்கள். அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பலருக்கும் சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

அப்படி பிக்பாஸ் 6வது சீசனில் கலந்துகொண்டு ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் தான் இலங்கை பெண் ஜனனி. இந்த நிகழ்ச்சி கொடுத்த பிரபலம் விஜய்யின் லியோ படத்தில் வாய்ப்பு கிடைத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

தற்போது ஜனனிக்கு நாயகியாக நடிக்கும் அளவிற்கு ஒரு படம் கிடைத்துள்ளது.

அந்த திரைப்படத்தில் பாக்கியலட்சுமி, மீனாட்சி பொண்ணுங்க சீரியல் புகழ் ஆர்யன் தான் நாயகனாக நடிக்கிறாராம்.

இவர்கள் இணையும் படத்திற்கு நிழல் என பெயரிடப்பட்டுள்ளதாம், அதுபோல திரைப்படத்தில் ரமேஷ் கண்ணா, மதன்குமார், திவ்யா கிருஷ்ணன், ஹரி விஜய் என பலரும் நடிக்கிறார்களாம்.

Share
தொடர்புடையது
07 2
பொழுதுபோக்குசினிமா

திரையுலகினருக்கு மகிழ்ச்சிச் செய்தி: நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட இயக்குனர் பாரதிராஜா வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார்!

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரும், கலைஞருமான பாரதிராஜா, நுரையீரல் தொற்று காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள...

26
பொழுதுபோக்குசினிமா

ரஜினி – கமல் இணையும் பிரம்மாண்ட படம்: மம்முட்டி வில்லனா? கோலிவுட்டை அதிரவைக்கும் புதிய அப்டேட்!

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரே திரையில் தோன்றவுள்ள செய்தி...

cin
பொழுதுபோக்குசினிமா

நட்சத்திரங்களின் திருமண உடைகள்: கோடிகளில் ஜொலிக்கும் லெஹங்காக்கள் – ரசிகர்களை வியக்க வைக்கும் ஆச்சரியமான விலைப் பட்டியல்!

இந்தியத் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களின் திருமணங்கள் என்றாலே அங்கு ஃபேஷன் மற்றும் ஆடம்பரத்திற்குப் பஞ்சம் இருக்காது....

12 1
பொழுதுபோக்குசினிமா

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணத்தை முன்னிட்டு,...