இன்ஸ்டாவில் லைக்குகளை வாரியிறைக்கும் ரசிகர்கள்

shivani narayanan e1637494081919

பகல் நிலவு, இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்து பின்னர் பிக்பாஸில் டாப் சிக்ஸ் வரை சென்று தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தவர் ஷிவானி நாராயணன்.

இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மூன்று மில்லியனுக்கும் மேல் அதிகமான பொலவர்ஸ்களை கொண்டு உள்ளார்.

இதேவேளை, உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோரின் நடிப்பில் உருவாகிவரும் விக்ரம் படத்தில் பிரதான பாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் ஷிவானி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அவரது வீடியோக்கள், புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருவது அனைவரும் அறிந்தது.

அண்மையில், ‘புயலே புயலே’ என்ற கப்ஷனுடன் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றிற்கு இரண்டு மில்லியன் லைக்குகள் கிடைத்துள்ளன.

அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Exit mobile version