இயக்குனர் பாரதிராஜா சில தினங்களுக்கு முன்பு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் பாரதிராஜா அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இவரை திரைப்பிரபலங்கள் பலர் நேரில் சென்று பார்த்தனர்.
இந்நிலையில் பாரதிராஜாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து பொது சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் 2 அல்லது 3 நாட்களில் வீடு திரும்புவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
#bharathiraja
Leave a comment