3 28
சினிமாபொழுதுபோக்கு

சிறந்த நடிகர்கள் 2024: நடிப்பால் அனைவரையும் மிரள வைத்தவர்களின் பட்டியல்

Share

2024ஆம் ஆண்டு தனது நடிப்பால் மக்கள் மனதில் இடம்பிடித்த சிறந்த நடிகர்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

விக்ரம் – ஒவ்வொரு திரைப்படத்திற்கும் கடின உழைப்பை கொடுத்து அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பவர்கள் சிலர் மட்டுமே. அப்படிப்பட்டவர் தான் சீயான் விக்ரம். இந்த ஆண்டு வெளிவந்த தங்கலான் படத்தில் நடிப்பில் பட்டையை கிளப்பி இருந்தார்.

விஜய் சேதுபதி – 2024ஆம் ஆண்டு இவருக்கு ப்ளாக் பஸ்டர் ஆக அமைந்துள்ளது. ஆம், மகாராஜா, விடுதலை 2 என இரண்டு திரைப்படங்களில் அசத்தியிருந்தார்.

சூரி – சென்ற ஆண்டு விடுதலை படத்தின் மூலம் கதையின் நாயகனாக மாறிய சூரி, இந்த ஆண்டு கருடன் படத்தில் மாஸ் ஹீரோவாகவும், கொட்டுக்காளியில் எதார்த்தமாகவும் பட்டையை கிளப்பி இருந்தார்.

சிவகார்த்திகேயன் – உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவான அமரன் படத்தில், முகுந்த் வரதராஜனாகவும் திரையில் தோன்றி அனைவரையும் தனது நடிப்பில் வியப்பில் ஆழ்த்தினார் சிவகார்த்திகேயன். மறுபக்கம் அயலானில் குழந்தைகளையும் நடிப்பில் கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் – பெரிய ஹீரோ படங்கள் என்றால் மாஸ் காட்சிகள் இருக்கும். வேட்டையன் படத்தில் இன்ட்ரோ காட்சி அப்படி இருந்தாலும், அதன்பின் வந்த இடைவேளை காட்சி, இது ரஜினி படமா என கேட்க வைத்தது. அந்த அளவிற்கு வித்தியாசமான முறையில் இப்படத்தில் ரஜினியின் நடிப்பை பார்க்க முடிந்தது.

தினேஷ் மற்றும் ஹரீஷ் கல்யாண் – தமிழ் சினிமாவிற்கு இந்த ஆண்டு சிறந்த படைப்பாக வந்த படங்களில் ஒன்று லப்பர் பந்து. கெத்து & அன்பு என்கிற கதாபாத்திரத்தில் தினேஷ் & ஹரீஷ் கல்யாண் நடிப்பு வேற லெவலில் இருந்தது.

கவின் – சினிமா கனவுடன் போராடும் இளைஞனாக, பல லட்சம் இளைஞர்களை பிரதிபலிப்பாக திரையில் நடித்து அனைவரும் ஸ்டார் படத்தின் மூலம் கண்களாக வைத்தார் கவின். அதே போல் பிளாடி பெக்கர் படமும் எமோஷனலாக மனதை தொட்டது.

சூர்யா – கங்குவா படம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், அதில் சூர்யாவின் நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள். 48 வயதிலும் சிக்ஸ் பேக் வைத்து, கதாபாத்திரத்திற்காக கடுமையாக பாடுபட்டார்.

தனுஷ் – இந்த ஆண்டு துவக்கமே தனுஷுக்கு கேப்டன் மில்லர் வெற்றியை பெற்று தர, அடுத்ததாக வந்த ராயனும் பட்டையை கிளப்பியது. இரண்டு படங்களிலும் ஆக்ஷன் ஹீரோவாக கைதட்டல்களை அள்ளினார் தனுஷ்.

ஆர்.ஜே. பாலாஜி – சிங்கப்பூர் சலூனில் கனவை துரத்தி செல்லும் நபராக அனைவராலும் கலங்க வைத்து பாலாஜி, சொர்க்கவாசல் படத்தில் தன்னால், இப்படியும் ஒரு நடிப்பை கொடுக்க முடியும் என நிரூபித்தார்.

கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி – 2024ஆம் ஆண்டில் வெளிவந்த அழகிய படைப்புகளில் ஒன்று மெய்யழகன். இதில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி இருவரும் நடித்தார்கள் என்று சொல்வதை விட, அதில் வாழ்ந்தார்கள் என்று தான் சொல்லவேண்டும்.

சசிகுமார் – சமூக நீதி பேசும் நந்தன் திரைப்படத்தில், வித்தியாசமான கதாபத்திரத்தில் நடித்து அனைவரையும் வியக்கவைத்தார் சசிகுமார். இப்படியொரு நடிப்பை அவரிடமும் யாரும் எதிர்பார்க்கவும் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

பிரஷாந்த் – டாப் பிரஷாந்த் கம் பேக் எப்போது கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்தகன் சிறந்த படமாக அவருக்கு அமைந்தது. கண் தெரிந்தும், தெரியாதது போல் பிரஷாந்த் நடித்தது அனைவரையும் கவர்ந்தது.

மணிகண்டன் – கடந்த ஆண்டு குட் நைட் படத்தில் கலக்கிய மணிகண்டனுக்கு இந்த ஆண்டு லவ்வர் மாபெரும் வெற்றியை தேடி கொடுத்தது. இதில் அவர் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரம் கைதட்டல்களை சம்பாதித்தது.

விஜய் – 2024ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்தில் அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரங்களிலும் பட்டையை கிளப்பி இருந்தார் தளபதி விஜய்.

சதீஸ் – இதுவரை நகைச்சுவையில் பின்னியெடுத்த சதீஸ், முதல் முறையாக ஆக்ஷன் ஹீரோவாக களத்தில் இரண்டு மாஸ் காட்டினார். சீரியஸான நடிப்பில் அனைவரும் மிரள வைத்தார்.

Share
தொடர்புடையது
samayam tamil 1
சினிமாபொழுதுபோக்கு

இனி சீரியஸ் வேடங்கள் வேண்டாம்: அடுத்த படத்தில் முழு காமெடிக்குத் திரும்பும் சிவகார்த்திகேயன்!

சமீபகாலமாகத் தீவிரமான (Serious) கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன், தனது அடுத்த படத்தில் மீண்டும்...

devi sri prasad turns hero in yellamma
பொழுதுபோக்குசினிமா

இசையமைப்பாளர் டூ ஹீரோ: எல்லம்மா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார் தேவி ஸ்ரீ பிரசாத்!

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத் (DSP), முதல்முறையாகத் திரையில்...

1500x900 44546170 11
பொழுதுபோக்குசினிமா

ராஜா சாப் படத்தின் தோல்விக்கு இதுதான் காரணமா? பிரபாஸுக்கு முன் இந்த கதையில் நடிக்கவிருந்த டாப் நடிகர்கள்!

இயக்குநர் மாருதி இயக்கத்தில், பான்-இந்தியா ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வாரம்...

actor vijay sethupathi helped a girl for she return tamil nadu
இலங்கைசினிமாபொழுதுபோக்கு

மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு இன்று 48-வது பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்களும், சொத்து விபரங்களும்!

மக்கள் செல்வன் என ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய் சேதுபதி. தமிழ், தெலுங்கு, இந்தி...