அரிசி கழுவிய தண்ணீரில் ஒளிந்திருக்கும் நன்மைகள்
எமது முன்னோர்களின் கூந்தல் பராமரிப்புக்கு முக்கிய பங்கு வகிப்பதில் இந்த அரிசி கழுவிய தண்ணீருக்கு அதிக பங்குண்டு. ஆனால் தற்போதைய நவீன காலத்தில் இந்த பழமை முறை மறைந்து காணாமல் போய்விட்டது.
ஆனால் இன்றும் ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் இவை பின்பற்றப்படுகின்றன.
இயற்கையாகக் கிடைக்கக்கூடிய அரிசி கழுவிய நீரை வீணாக்காமல் கூந்தல் வளர்ச்சிக்கும் சரும பராமரிப்புக்கும் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளா நன்மைகளை அறிவோம்.
சருமப் பராமரிப்பு
இந்த நீரில் இயற்கையாக அதிக சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றமையால் இதனை பேஷியல் கிளிசராகவும் பயன்படுத்தலாம்.
அரிசி கழுவிய தண்ணீரைக் கொண்டு முகத்தைக் கழுவி வந்தால் முகத்திலுள்ள சுருக்கங்கள் நீங்கி சருமத்தில் காணப்படும் துளைகளும் அடைக்கப்படும்.
இந்த நீரை 12 முதல் 24 மணி நேரம் வரை சாதாரணமாக ஒரு பாத்திரத்தில் வைத்து பின் பயன்படுத்தினால் அதிக பலனை தரும்.
வெயில் காரணமாக சருமம் வறண்டு முதுமை தோற்றத்தை ஏற்படுத்தி விடும். இதற்கு அரிசி தண்ணீர் மூலம் முகம் கழுவி வந்தால் இளமை தோற்றத்தை மீட்டெடுக்கலாம்.
அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் சருமத் துளைகளின் வழியே சரும செல்களுக்கு கிடைத்து, சருமம் ஆரோக்கியமாகவும் பொலிவோடும் இருக்கும்.
அடர்த்தியான கூந்தலுக்கு அரிசி தண்ணீர்
இந்த அரிசி தண்ணீரில் உள்ள அமீனோ அமிலம் மற்றும் கார்போஹைட்ரேட் தலைமுடி வேர்களை உறுதியாக்குகிறது.
கூந்தல் பொலிவிழந்து காணப்பட்டால் கூந்தலை அரிசி தண்ணீரில் அலசி ஊற வைத்து குளித்தால் பளபளக்கும். பொடுகு, வறட்சி, அரிப்பு போன்ற பாதிப்புக்களையும் சரிசெய்துவிடும்.
அரிசி கழுவிய தண்ணீரை பயன்படுத்துவதால் கூந்தலின் எலாஸ்டிசிட்டியை அதிகரித்து முடி கொட்டுதல் பிரச்சினையையும் தடுக்கின்றது.
இனியாவது அரிசி கழுவிய நீரை கீழே ஊற்றாமல் பத்திரப்படுத்தி உங்கள் தலைமுடிக்கும் சருமத்துக்கும் மசாஜ் செய்து இளமையை தக்க வைத்து ஏராள பலன்களை பெறுவோம்.
Leave a comment