வெங்காயம் சமையலுக்கு மட்டுமா?
தலைமுடியின் வளர்ச்சிக்கு சிறந்த ஒன்றாக வெங்காயம் காணப்படுகிறது. இதற்கு வெங்காயத்திலுள்ள சல்பர் தான் முக்கிய காரணமாக அமைகிறது.
உங்கள் முடி அதிகம் உதிர்ந்து குறைந்து காணப்பட்டால் வெங்காயத்தை பயன்படுத்தி உடன் பயனை பெறுங்கள். இப்போது வெங்காயத்தை எப்பொருள்களுடன் பயன்படுத்தி தலைமுடியை பாதுகாக்கலாம் என்பதை பார்ப்போம்.
வெங்காயத்தில் இருக்கும் சத்துக்கள், தலைமுடி இயற்கையாக பளபளப்பை பெற்று, நல்ல ஆரோக்கியமாகவும், நீண்டும் வளர உதவும். இது ஈரத்தன்மையை முடியினுள் தக்கவைத்துக்கொள்ள உதவும்.
வெங்காயத்தின் சாறு
சின்ன வெங்காயத்தை அல்லது பெரிய வெங்காயத்தை தேவையான அளவு எடுத்து அதனை அரைத்து சாறு எடுத்து கொள்ளுங்கள். அதனை தலைமுடியின் வேர் பகுதியில் நன்கு தேய்த்து மசாஜ் செய்து சிறிது நேரம் விட்டு பின் குளிர்ந்த நீரில் முடியை அலசுங்கள்.
வெங்காயம் – தேங்காய் எண்ணெய்
வெங்காயத்தை நன்கு அரைத்து அதனுடன் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து இரண்டையும் கலக்கி தலையில் தடவுங்கள். பின்னர் மிதமாக மசாஜ் செய்து முடியை அலசுங்கள்.
வெங்காயம் – முட்டை
வெங்காய சாறு எடுத்து அந்தச் சாற்றுடன் முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து நன்கு கலக்கி அந்த கலவையை தலையின் சேர் பகுதியில் படும்படி நன்கு தேய்த்து மசாஜ் செய்து ஊறவிட்டு அலசுங்கள். தலைமுடி அடர்த்தியாவதுடன் தலைமுடி பிரச்சினையும் நீங்கும். வாரம் ஒருமுறை இவ்வாறு செய்யலாம்.
வெங்காயம் – உள்ளி
வெங்காயம் மற்றும் உள்ளி இரண்டையும் தேவையான அளவு எடுத்து அரைத்து சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து பின் தலையில் தேய்த்து மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து அலசுங்கள்.
வெங்காயம் – எலுமிச்சைபழம்
வெங்காயச் சாற்றுடன் எலுமிச்சை சாறை கலந்து தலையில் வேர் பகுதியில் நன்கு தேய்த்து மசாஜ் செய்து சிறிது நேரத்தின் பின் கழுவலாம்.
வாரம் ஒருமுறை இவ்வாறு செய்யலாம்.
இவ்வாறு செய்து வருவதால் 2 வாரங்களில் முடி உதிர்வது குறைந்து 4 வாரங்களில் புதிய முடி வளர்வதை நீங்களே உணர்வீர்கள்.
Leave a comment