அழகுக் குறிப்புகள்
விரைவில் வயதாகிறதா? – கவலைய விடுங்க
விரைவில் வயதாகிறதா? – கவலைய விடுங்க
வாழ்க்கையில் வயதாவது தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் இன்றைய காலத்தில் விரைவிலேயே வயதாவது போன்ற தோற்றம் உண்டாகி விடுகிறது. இதனால் நீங்கள் கவலையில் உள்ளீர்களா? அதற்கு உங்கள் வாழ்க்கையை முறையை மாற்றியமைத்தாலே போதும். வயதாவதை தாமதப்படுத்திக் கொள்ளலாம்.
நீங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டிய பழக்கவழக்கங்களை இங்கு பார்ப்போம்.
அதிகநேரம் ஸ்க்ரீன் பார்க்கக்கூடாது
சீரான தூக்கம் அவசியம்
சரியான நேரத்துக்கு தூங்காது இருப்பது உங்கள் வாழ்க்கையில் வயதாவதை தூண்டும் காரணியாகும். போதுமான தூக்கமின்மை உங்கள் தூக்கத்தை விரைவுபடுத்துவதோடு இருதய நோய்களையும் உண்டு பண்ணுகின்றது.
அதிக நீரை பருதல் வேண்டும்
தினமும் அவரவர் உடல் உழைப்புக்குத் தகுந்தாற்போல் நீரைப் பருக வேண்டும். நாளொன்றுக்கு குறைந்தது இரண்டு லீற்றர் நீரையாவது கட்டாயம் குடிக்க வேண்டும். நீர்த்தன்மை அதிகமுள்ள தர்ப்பூசணி, வெள்ளரிக்காய், தக்காளி போன்ற பழ வகையையும் உண்ணலாம். இதனால் உடலில் நீர்த்தன்மை குறைவடையாது பாதுகாக்கப்பட்டு முதுமை தடுக்கப்படும்.
அதிக நேரம் ஒரே இடத்தில் இருக்கலாகாது
ஒரே இடத்தில் உட்கார்ந்தே வேலை பார்க்கும் வாழ்க்கை முறைக்கு நாம் மாறிவிட்டோம். ஒரே இடத்தில் உட்கார்ந்து பணிபுரியும்போது எம் உடலில் உள்ள கலோரிகள் கரையாது கொழுப்புச் சத்தாக மாறிவிடுகிறது. இதனால் இதயத்தைச் சுற்றி கொழுப்புச் சத்து கூடி இதயம் சார்ந்த நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே சிறிது நேரத்துக்கு ஒருமுறை எழுந்து நடத்தல் வேண்டும்.
சத்துள்ள உணவுகளை உட்கொள்தல்
உடற்பயிற்சி அவசியம்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உடற்பயிற்சி செய்தல் அவசியம். வாரத்துக்கு 4 முறை உடற்பயிற்சி செய்தால் செல்களுக்கு இரத்த ஓட்டம் அதிகரித்து செல்கள் இறப்பு அடைவதை தடுக்கிறது. இதனால் வயதாகுவதால் ஏற்படும் மூட்டு வலி, தோல் தொய்வு வயதாகுவதால் ஏற்படும் பிரச்சினைகளை தடுக்கிறது.
இவ்வாறு தினமும் எமது பழக்கவழக்கங்களில் சிறிய சிறிய மாற்றங்களை ஏற்படுத்தினாலே வயதாவதை தடுப்பதோடு உடல் ஆரோக்கியத்தையும் பெறலாம்.
You must be logged in to post a comment Login