நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘பீஸ்ட்’.
படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், தற்போது டப்பிங் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிரபல நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பில் தனது பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் இல்லையெனில் படம் கண்டிப்பாக ஏப்ரல் 14 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இவர்களுடன் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
2022 ஆம் ஆண்டுக்கான மிகப்பெரும் எதிர்பார்ப்பைக்கொண்டுள்ள இத் திரைப்படத்தை கானா தளபதி ரசிகர்கள் பெரும் ஆவலுடன் உள்ளமை அனைவரும் அறிந்ததே.
#Cinema
Leave a comment