நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் கடந்த ஏப்ரல் 13-ஆம் திகதி வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது ‘பீஸ்ட்’.
எதிர் மறையான விமர்சனங்களை சந்தித்தாலும் படம் வசூல் மழை பொழிந்து வருகிறது என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், படத்தின் இரண்டாம் பாகம் வெளிவர வாய்ப்புக்கள் உள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் சம்மதம் தெரிவித்தால் இரண்டாம் பக்கம் உருவாக வாய்ப்புக்கள் உள்ளன என இயக்குநர் நெல்சன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, படம் மே மாதம் 11 ஆம் திகதியன்று ஓடிடியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#cinema