பிக்பாஸ் பிரபலத்துக்கு ஜோடியாகிறார் பீஸ்ட் நடிகை

d893d8b8 8b4d 41dd 8d56 9b4bb4d2b418

விஜய் டிவியின் காண காணும் காலங்கள் தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் கவின்.

தொடர்ந்து சரவணன் மீனாட்சி தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

நட்புன்னா என்னன்னு தெரியுமா’ என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான கவின், விஜய் டிவியின் பிக்பாஸ்-3 நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகப்பிரபலமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கவின் நடிப்பில் பயபுள்ள, சத்ரியன்ம்,லிப்ட் ஆகிய படங்கள் வெளிவந்தன.

இறுதியாக கவின் நடிப்பில் வெளியான ’லிப்ட்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் கவின் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தில் கவினுக்கு ஜோடியாக ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றிய நடிகை அபர்ணா தாஸ் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த படத்திற்கு ’தாதா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

கணேஷ் பாபு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில், பாக்யராஜ், மோனிகா, ஹரிஷ்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கவுள்ளார்.

Exit mobile version