வின்னர் இவங்கதான்- பிக்பாஸ் பிறகு விசித்ரா வெளியிட்ட முதல் வீடியோ

tamilnih 44

பிக்பாஸ் 7 சீசன் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் தொடங்கப்பட்டு இப்போது முடிவையும் எட்டி வருகிறது. நிறைய இளம் போட்டியாளர்களுக்கு மத்தியில் மிகவும் Strong போட்டியாளராக இருந்து வந்தவர் தான் விசித்ரா.

95 நாட்களுக்கு மேலாக கடும் போட்டிகளை விளையாடி மக்களின் மனதையும் வென்று வந்தவர் கடந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார்.

பிக்பாஸில் இருந்து வெளியே வந்தவருக்கு அவரது உறவினர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளார்கள்.

இந்த நிலையில் விசித்ரா பிக்பாஸிற்கு பிறகு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், எனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் நன்றி நான் இத்தனை நாட்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் இருப்பேன் என்று எல்லாம் கொஞ்சம் கூட நினைக்கவே இல்லை.

பிக்பாஸ் என்னை வெளியே அனுப்பியது நிறைய பேர் Unfair என்று சொன்னீர்கள், அந்த அளவிற்கு நான் மக்கள் மனதில் இருக்கிறேன் என்று நினைக்கும் போது எனக்கு சந்தோஷமாக இருக்கு.

என்னை பலரும் யார் டைட்டில் ஜெயிப்பார் என கேட்கிறார்கள், பலரும் கூறுவது அர்ச்சனா தான்.

ஆனால் என்னை பொறுத்தவரையில் மாயா ஜெயித்தால் நன்றாக இருக்கும் என தோன்றுகிறது, தனிப்பட்ட காரணம் இல்லை. பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த காரணத்தின் அடிப்படையில் தான் நான் கூறுகிறேன் என பேசியுள்ளார்.

Exit mobile version