tamilnaadi 78 scaled
சினிமாபொழுதுபோக்கு

மகளின் உடலை பார்க்க சென்னை வராத இளையராஜா? கடைசி நேரத்தில் ஷாக் தகவல்

Share

மகளின் உடலை பார்க்க சென்னை வராத இளையராஜா? கடைசி நேரத்தில் ஷாக் தகவல்

கடந்த சில வருடங்களாக பவதாரிணி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகியும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி பாடகராக காணப்படும் இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, பவதாரிணி என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இதில் பவதாரிணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வந்த நிலையில். இலங்கையில் திடீரென மரணமடைந்துள்ளார்.

இதை தொடர்ந்து, விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்ட பவதாரணியின் உடல் சென்னை டி.நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவரின் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட் உள்ளது.

இந்த நிலையில், உயிரிழந்த மகளின் உடலை பார்க்க இளையராஜா வரவில்லை என்றும், அதற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது்

இலங்கையில் இசை நிகழ்ச்சிக்காக சென்றிருந்த இளையராஜா, தனது மகள் இறந்த செய்தியை கேட்டு உடனடியாக மருத்துவமனை சென்று பார்த்து இருந்தார்.

இவ்வாறான நிலையில், அவர், சென்னை வர முடியாது என்பதால், பவதாரணியின் உடலுக்கு சென்னையில் அவரால் அஞ்சலி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதே சமயம் அவரது உடல் தேனியில் அடக்கம் செய்யப்ப உள்ளதால், இளையராஜா இலங்கையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்து தனது மகளின் இறுதிச்சடங்கு நிகழ்வில் கலந்துகொள்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 42
பொழுதுபோக்குசினிமா

கழிப்பறையில் ரகசிய வீடியோ: கன்னட நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்ற மூன்று நாள் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் போட்டியில் (Celebrity...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...

image ea82c3095c
பொழுதுபோக்குசினிமா

கும்பமேளா மோனலிசாவின் நெகிழ்ச்சி: முதல் படச் சம்பளத்தில் பெண்களுக்கான பாடசாலை! 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ‘மோனலிசா போஸ்லே’ (Monalisa Bhosle), ஒரு சமூக வலைதளப் பதிவின் மூலம்...