9 39
சினிமாபொழுதுபோக்கு

SK25 படத்தில் நடிக்க இவர் தான் காரணமா?.. அதர்வா சொன்ன ரகசியம்

Share

SK25 படத்தில் நடிக்க இவர் தான் காரணமா?.. அதர்வா சொன்ன ரகசியம்

பாணா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அதர்வா. இவர் 80ஸ்- 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த மறைந்த நடிகர் முரளியின் மூத்த மகன் ஆவார்.

பாணா காத்தாடி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால் அப்படத்தை தொடர்ந்து பல படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அந்த வகையில், பரதேசி, தள்ளிப் போகாதே,100, பூமராங், இமைக்கா நொடிகள் போன்ற பல படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பெற்றார்.

இருப்பினும் அவரால் பெரிய ஸ்டார் என்கிற அந்தஸ்த்தை பெறும் அளவுக்கு பெரிய ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார். தற்போது, இவர் கைவசமாக டி என் ஏ, நிறங்கள் மூன்று, ஒத்தைக்கு ஒத்த, அட்ரஸ் போன்ற படங்கள் உள்ளன.

அதை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் SK25 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தில் நடிக்கும் காரணம் குறித்து பகிர்ந்துள்ளார். ” பரதேசி படத்திலிருந்து எனக்கு சுதா கொங்கராவை தெரியும். அவர் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்.

இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணி புரிய வேண்டும் என்று கூறினார். அப்படி ஒரு வாய்ப்பாக அமைந்த திரைப்படம் SK25 . இப்படத்தில் நடிக்கும் அனைவரையும் எனக்கு தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...