பிரசவ தழும்புகள் கவலையளிக்கிறதா?
கர்ப்ப காலங்களின்போது பெண்கள் மனதில் ஏற்படும் அனுபவங்கள் மகிழ்ச்சி தருபவை தான். ஆனால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் கவலையை ஏற்படுத்திவிடும்.
உதாரணமாக பிரசவத்துக்கு பின் வயிற்றில் வரி வரியாக கோடுகள், தடயங்களை விட்டுச்செல்கின்றது. பெண்கள் புடவை கட்டும்போது தழும்புகளை மறைக்க வேண்டிய அவசியம் உண்டாகிறது.
இந்த மாற்றங்கள் உடனடியாக மறையாது. வீட்டில் கிடைக்கக் கூடிய இயற்கை பொருள்களில் மூலம் இவற்றை சரி செய்யலாம்.
தேங்காய் எண்ணெய்
சாதாரணமாக தேங்காய் எண்ணெய்யில் தழும்புகளை மறைய செய்யும் சக்தி இருக்கிறது. தேங்காய் எண்ணெய் பல அற்புதங்களை செய்யவல்லது. கர்ப்பமாக இருக்கும்போதில் இருந்தே நீங்கள் தேங்காய் எண்ணெயை வயிற்றில் தடவி வரலாம்.
தழும்புகள் மீதும் லேசான சூட்டில் தேங்காய் எண்ணெய் சேர்த்து மசாஜ் செய்து வர வேண்டும். தினமும் மூன்று முறை இப்படி செய்ய வேண்டும். இதனால் தழும்புகள் மறையும்.
சர்க்கரை
தழும்புகளை நீக்க சர்க்கரையுடன் ஒரு கரண்டி எலுமிச்சை சாறு, விற்றமின் ஈ எண்ணெய் ஆகியவற்றை கலக்கவும். தழும்புகள் மற்றும் பிரசவ வரிகள் மீது தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும். இதனால் குறைந்த காலத்தில் தழும்புகள் மறைந்து மினுமினுப்பான சருமமாக காட்சியளிக்கும்.
தக்காளி
சரும பளபளப்புக்கு தக்காளி பெருந்துணை புரிகிறது. இதனை பிரசவத் தழும்புகள் உள்ள இடங்களில் இரவு உறங்க போகும் முன்னர் தடவிக்கொள்ளுங்கள். காலையில் கழுவி விடவும். இதனால் தழும்புகள் வெகுவிரைவில் மறைந்து வரும்.
எலுமிச்சை
எலுமிச்சை தழும்புகளை மறைய வைக்கும் முக்கியமான பொருளாகும். எலுமிச்சையை வெட்டி காயத்தழும்பின் மீது தேய்க்கவும். 6 மாதங்கள் வரை தொடர்ந்து இவ்வாறு செய்து வர தழும்புகள் மறைந்து விடும். வறண்ட சருமத்தினர் எலுமிச்சையை தவிர்க்கவும்.
Leave a comment