23 63f49e88716b5
சினிமாபொழுதுபோக்கு

நடிகை அனுஷ்கா இத்தனை கோடிக்கு சொந்தகாரியா? 43 வயசானாலும் பின்னுறாங்களே!

Share

நடிகை அனுஷ்கா இத்தனை கோடிக்கு சொந்தகாரியா? 43 வயசானாலும் பின்னுறாங்களே!

தென் இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக காணப்படுபவர் தான் அனுஷ்கா ஷெட்டி. இவரின் நிஜப் பெயர் ஸ்வீட்டி ஷெட்டி. சினிமாவுக்காக தன்னுடைய பெயரை அனுஷ்கா ஷெட்டி என மாற்றிக் கொண்டார்.

2005 ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தார் அனுஷ்கா. அந்தப் படம் சூப்பர் ஹிட் ஆனதால் அனுஷ்காவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கின.

தமிழில் வெளியான இரண்டு படத்தின் மூலம் அனுஷ்காவை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியிருந்தார் சுந்தர் சி. அதற்குப் பிறகு விஜய் உடன் வேட்டைக்காரன், சூர்யாவுடன் சிங்கம், ரஜினியோடு லிங்கா என அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்து டாப் ஹீரோயினாக வலம் வந்தார்.

நடிகை அனுஷ்காவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் அது அருந்ததி மற்றும் பாகுபலி. இந்த இரண்டு படமும் வரலாற்று கதை அம்சம் கொண்ட படங்கள். இதில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருந்தார்.

இதை தொடர்ந்து இஞ்சி இடுப்பழகி என்ற படத்திற்காக உடல் எடையை அதிகரித்த அனுஷ்காவுக்கு அதன் பிறகு உடல் இடையை குறைக்க முடியாமல் போனது. இதன் காரணத்தால் அவருடைய மார்க்கெட் சரிந்தது. தற்போது மலையாளத்தில் படம் ஒன்றில் நடித்து வருகின்றார்.

நடிகை அனுஷ்காவுக்கு 43 வயதாகிறது ஆனாலும் அவர் இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவர் பற்றிய காதல் கிசுகிசுக்கள் கசிந்த வண்ணம் இருந்தது.

இந்த நிலையில், நடிகை அனுஷ்காவின் சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகை அனுஷ்காவின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் 130 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

இவர் ஒரு படத்திற்கு 5 கோடி வரை சம்பளம் வாங்கி வருகின்றாராம். அத்துடன் விளம்பரங்களில் நடிப்பதற்கு ஒரு கோடி சம்பளமாக பெறுகிறார்.

இவருக்கு சொந்தமாக பெங்களூர், ஐதராபாத் போன்ற நகரங்களில் சொகுசு வீடுகளும், பத்துக்கு மேற்பட்ட சொகுசு கார்களும் உள்ளதாம். இதை தவிர ரியல் எஸ்டேட்டிலும் பல கோடிகள் முதலீடு செய்து அதன் மூலமும் கோடிக்கணக்கில் சொத்துக்களை குவித்து வருகிறார்.

Share
தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...