மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன்.
இவர் தனுஷின் கொடி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
இதேவேளை தெலுங்கில் வெளியான ‘தேஜ் ஐ லவ் யூ’, ‘உன்னடி ஒகடே சிந்தகி’, ‘ ஹலோ குரு ப்ரோமோ’ ஆகிய படங்களில் நடித்து ரசிகர் பட்டாளத்தை கவர்ந்த இவர் இந்த படங்களின் தமிழ் ரிமேக் மூலமாக தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார்.
நடிப்பில் படுபிஸியாக இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருப்பவர் அனுபாமா. இவரது புகைப்படங்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
இந்த நிலையில், சித்திரை புத்தாண்டை முன்னிட்டு கையில் கொன்றைப்பூவுடன் பட்டுப்புடை உடுத்தி
போட்டோஷூட் நடத்தி உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடிய வீடியோவும் வைரலாகி வருகிறது.
அதே பட்டுப்புடவை மற்றும் கொன்றைப்பூவுடன் தளபதி விஜயின் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடியுள்ள விடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அனுபாமா. இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.
#Cinema
Leave a comment