ஐந்து மொழிகளில் வெளியாகிறது விஜய் சேதுபதியின் ’அனபெல்லா சேதுபதி’.
தமிழ் சினிமாவில் , மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு ரசிகர் பட்டாளம் உண்டு. தமிழில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி கைவசம் நிறைய படங்களை வைத்துள்ளார்.
இவரது படங்கள் அடுத்தடுத்து திரையரங்குகள் மற்றும் ஓடிடி ஆகியவற்றில் வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடித்த ’அனபெல்லா சேதுபதி’ என்ற திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் படத்தின் ரிலீஸ் திகதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் செப்டம்பர் 17ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்று ‘அனபெல்லா சேதுபதி’ படத்தின் நாயகியான டாப்சி தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
பழம்பெரும் இயக்குநர் சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதி, டாப்சி, ராதிகா, யோகி பாபு, கிஷோர் உள்பட பலர் நடித்துள்ளனர்.

Leave a comment