Akshaya யார் இந்த அக்ஷயா உதயகுமார்?
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிரபலமான ரியாலிட்டி ஷோ ஆகிய பிக்பாஸ் சீசன் 7 இன்று முதல் ஒளிபரப்பப்படுகிறது. இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களில் அக்ஷயா யார் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
அக்ஷயா உதயகுமார் ஒரு இந்திய நடிகை, மாடல் மற்றும் சமூக ஊடக செல்வாக்கு உடையவர், இவர் முக்கியமாக தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறைகளில் பணிபுரிகிறார். தமிழ் திரைப்படமான லவ் டுடே (2022) மற்றும் மலையாளத் திரைப்படமான சித்தி (2022) ஆகியவற்றில் அவர் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர்.
நடிப்புத் துறையும் பிரபலமும் இல்லாமல் இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்ஸராக இருந்து இங்கு வர மிகவும் கஷ்டப்பட்டேன் என்று கூறியுள்ளார். இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் உள்ளே வந்துள்ளார். அவருக்கு ஒரு அண்ணன் இருக்கிறார். மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்ட பெண் இவர் மலையாளியாக இருந்தாலும் தமிழ் மிகவும் சரளமாக பேசுகிறார்.
அக்ஷயாவுக்கு கற்றாழை செடி ஒன்றை கமல்ஹாசன் பரிசாக அளித்தார். பின் அவருக்கு வாழ்த்து கூறி பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்தார்.
பிக்பாஸ் வீட்டுக்குள் அக்ஷரா நுழைந்ததை அடுத்து, ஏற்கனவே பிக்பாஸ் வீட்டு கேப்டனாக தற்காலிகமாக அறிவிக்கப்பட்டுள்ள மணி சந்திராவிடம் வாக்குவாதம் செய்து தனக்கு அந்த பட்டயத்தை தரச் சொல்லி கேட்டார். இருவரும் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தனர். நேரம் போய்க்கொண்டே இருந்ததால் பிக்பாஸ் நேரம் கழிந்ததை அறிவித்துவிட்டார்.
அக்ஷயாவின் வருகை பிக்பாஸ் சீசன் 7-க்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
- bigg boss
- bigg boss 7
- bigg boss 7 promo
- bigg boss 7 tamil
- bigg boss 7 tamil contestant
- bigg boss 7 tamil contestants
- bigg boss 7 tamil contestants list
- bigg boss 7 tamil launch date
- bigg boss 7 tamil promo
- bigg boss promo
- bigg boss season 7
- Bigg Boss season 7 tamil
- bigg boss season 7 tamil contestants
- bigg boss season 7 tamil promo
- bigg boss tamil
- bigg boss tamil 6
- bigg boss tamil 7
- bigg boss tamil promo
- bigg boss tamil season 7