3 23
சினிமாபொழுதுபோக்கு

விஜய் மகனுக்கு உதவ முன் வந்த அஜித்.. இப்படியொரு விஷயம் நடந்ததா

Share

விஜய் மகனுக்கு உதவ முன் வந்த அஜித்.. இப்படியொரு விஷயம் நடந்ததா

தமிழ் சினிமாவில் தற்போது என்ட்ரி கொடுத்துள்ள புதிய இளம் இயக்குநர்களில் ஒருவர் சஞ்சய். தளபதி விஜய்யின் மகனான இவர் நடிகராக இல்லாமல், இயக்குநராக களமிறங்கியுள்ளார்.

இவருடைய முதல் திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் குறித்து 2023ஆம் ஆண்டு அறிவிப்பு வெளிவந்த நிலையில், சில காரணங்களால் படப்பிடிப்பு துவங்காமல் இருந்தது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் தான் இப்படத்தின் ஹீரோ சந்தீப் கிஷன் என்கிற அறிவிப்பு வெளிவந்தது.

இந்த நிலையில், விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தின் அறிவிப்பு வெளிவந்தபின் படப்பிடிப்பு துவங்காமல் இருந்த நிலையில், சஞ்சய் சற்று மனமுடைந்துபோய் வேறு தயாரிப்பு நிறுவனத்தை அணுகலாமா என, தனது நலம்விரும்பியான சுரேஷ் சந்திராவிற்கு கால் செய்து கேட்டுள்ளார்.

அஜித்தின் மேலாளராக இருப்பவர் சுரேஷ் சந்திரா என்பதை அனைவரும் அறிவோம். சஞ்சய் போன் கால் செய்தபோது, சுரேஷ் சந்திராவின் அருகில் அஜித்தும் இருந்தாலும், அப்போது ‘யாருடன் பேசிக்கொண்டு இருக்குறீகள்’ என அஜித் கேட்க, ‘விஜய்யின் மகனிடம்’ என அவர் கூறியுள்ளார்.

பின் அந்த போனை வாங்கிய அஜித், சஞ்சய்யிடம் நலம் விசாரித்து, அவருடைய முதல் படத்திற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அஜித், “இப்படத்தில் எதாவது பிரச்சனை என்றால் என்னிடம் தயங்காமல் கூறு, நான் உனக்கு வேறு நல்ல தயாரிப்பு நிறுவனத்தை கூறுகிறேன்” என அஜித் பேசினாராம். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் அந்தணன் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...