image 1200x630 8
பொழுதுபோக்குசினிமா

அஜித் அனுப்பிய எஸ்எம்எஸ்: நடிகர் பார்த்திபன் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு

Share

நடிகர் பார்த்திபன் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியிடும் பதிவுகள் இணையத்தில் வைரலாவது வழக்கம். சமீபத்தில் அவர் நடிகர் அஜித் குமார் பற்றிப் பதிவிட்டதையடுத்து, அஜித் உடனே அவருக்கு குறுஞ்செய்தி (SMS) அனுப்பியுள்ளார். அந்த முழு செய்தியையும் பார்த்திபன் தற்போது வெளியிட்டுள்ளார்.

நடிகர் பார்த்திபன் தனது பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:

“ஒருவரோடு ஒருவரை ஒப்பிடாமல், ஒவ்வொருவரின் தனித்தன்மையையும் உயர்வாய் பாராட்டி உளம் மகிழச் செய்வது என் வழக்கம்! அப்படி நேற்று முன்தினம் Mr. Ajith பற்றி நான் பதிவிட்டதற்கு அவரது அன்புமிகு ஒழுக்கமிகு ரசிகர்கள் நன்றி தெரிவிக்க நான் அதையும் ரசித்தேன். ஆனால், நான் சற்றும் எதிர்பாராமல் அவரிடமிருந்தே அந்தக் குறுஞ்செய்தி வந்தது.”

“எந்த எதிர்பார்ப்புமில்லாமல் ஒருவர் நம்மை பாராட்டி வாழ்த்துவதற்கு, சுடச்சுட நன்றி தெரிவிப்பதை அவர் தலையாய கடமையாக நினைக்கிறார் என்பதனை எண்ணி மனதிற்குள் பாராட்ட நினைத்தேன். அது இப்படி வெளியே வந்துவிட்டது!”

இவ்வாறு நடிகர் பார்த்திபன் அஜித்தின் குறுஞ்செய்தி மற்றும் அவருடைய பண்பு குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...