நடிகர் அஜித்குமார் தற்போது மலேசியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கார் ரேஸ் போட்டியில் (Car Race) பங்கேற்றுள்ள நிலையில், அங்குத் திரண்டிருந்த தனது ரசிகர்களுக்கு அவர் ஒரு முக்கியமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அஜித் பங்கேற்கும் 12 மணி நேரம் நடக்கும் இந்த கார் ரேஸ் போட்டியில் அவரது டீம் கலந்துகொள்கிறது.
அஜித்தைக் காண வேண்டும் என்கிற ஆசையினால் ரேஸ் நடக்கும் இடத்திற்கு ஏராளமான ரசிகர்கள் படையெடுத்து வந்தனர். அவர்கள் மற்ற ரேஸ் குழுக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. இதனைக் கண்ட அஜித், அங்குள்ள ரசிகர்களைச் சந்தித்துப் பேசினார். அவர் விடுத்த வேண்டுகோள் பின்வருமாறு:
“மற்ற டீம்களைத் தொந்தரவு செய்யாதீர்கள். உங்கள் பெயர் மட்டுமின்றி என் நற்பெயரும் இதில் இருக்கிறது. அதனால் யாரையும் தொந்தரவு செய்யவேண்டாம் என எல்லோரிடமும் சொல்லுங்கள்.”
இந்த அறிவுறுத்தல் அடங்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

