தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். வலிமை வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் அஜித்- 61 படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை தொடர்ந்து லைகா தயாரிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கேஜிஎப் படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில், அஜித் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே வெளியான தகவலின் படி சூர்யாவே நடிக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அஜித் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது.
#Cinema

