1786336 3
சினிமாபொழுதுபோக்கு

மீண்டும் இந்தியில் களமிறங்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

Share

ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அருண் ராஜா காமராஜ் இயக்கிய கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்து பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஃபர்ஹானா, டிரைவர் ஜமுனா, சொப்பன சுந்தரி ஆகிய படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. தற்போது அதே கண்கள் படம் மூலம் பிரபலமான ரோகின் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ‘மாணிக்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். எண்டேமோல் ஷைன் இந்தியா நிறுவனம் மற்றும் நட்மெக் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் சாம்ராட் சக்கரவர்த்தி இயக்குகிறார்.

1786337 1

‘மாணிக்’ திரைப்படத்தில் சம்யுக்தா சண்முகநாதன், விவேக் பிரசன்னா, குழந்தை நட்சத்திரங்கள் சாய் ஜனனி மற்றும் ஸ்வர் காம்ப்ளே உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளில் உளவியல் திரில்லர் ஜானரில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் நைனிடாலில் தொடங்குகிறது. மேலும், ‘மாணிக்’ திரைப்படத்தை 2023-ஆம் ஆண்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

#Cinema

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...

image ea82c3095c
பொழுதுபோக்குசினிமா

கும்பமேளா மோனலிசாவின் நெகிழ்ச்சி: முதல் படச் சம்பளத்தில் பெண்களுக்கான பாடசாலை! 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ‘மோனலிசா போஸ்லே’ (Monalisa Bhosle), ஒரு சமூக வலைதளப் பதிவின் மூலம்...

dailythanthi 2026 02 14 7466cod3 6
பொழுதுபோக்குசினிமா

தனுஷின் D55: 35 கோடி சம்பளத்தை மறுத்த மம்மூட்டி! – ‘கதைக்காக’ எடுத்த அதிரடி முடிவு!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநரான தனுஷ், தற்போது தனது 55-வது திரைப்படத்தை இயக்கி...