நடிகை சமந்தா பிரபல இந்தித் திரைப்பட இயக்குநர் ராஜ் நிடிமொருவை காதலித்து வருவதாகக் கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இருவரும் எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் நாக சைதன்யாவுடனான விவாகரத்திற்குப் பின்பு, நடிகை சமந்தா இந்தி இயக்குநர் ராஜ் நிடிமொருவுடன் நெருங்கிய நட்பில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன.
ராஜ் நிடிமொரு இயக்கிய ‘தி ஃபேமிலி மேன்’ மற்றும் ‘சிட்டெடல்’ ஆகிய இணையத் தொடர்களில் சமந்தா நடித்திருந்தார். அப்போது முதல் இருவருக்கும் இடையில் நெருங்கிய நட்பு ஏற்பட்டது.
நாட்கள் செல்ல இந்த நட்பு காதலாக மாறியதாகவும், இருவரும் பண்டிகைகளைச் சேர்ந்து கொண்டாடுவது, ராஜ் குடும்பத்தினரைச் சமந்தா சந்திப்பது எனத் தொடர்ச்சியாகப் புகைப்படங்கள் வெளியிட்டு வந்ததாகவும் கூறப்பட்டது.
சமந்தா தனது புதிய வாசனைத் திரவிய பிராண்டான ‘சீக்ரெட் அல்கெமிஸ்ட்’ (Secret Alchemist) வெளியீட்டு விழாவின் படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில், அவர் ராஜைக் கட்டிப்பிடித்தபடி எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த நெருக்கமான புகைப்படம் இருவரும் காதலிப்பதைத் தற்போது உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
சமந்தா தனது பதிவில், தனது வெற்றிகளைப் பற்றிப் பேசும் அதே வேளையில், “நான் என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரால் சூழப்பட்டுள்ளேன். ரிஸ்க் எடுப்பது, உள்ளுணர்வை நம்புவது, முன்னேறும் ஒவ்வொரு கட்டத்திலும் கற்றுக்கொள்கிறேன். நான் சந்தித்த சில புத்திசாலித்தனமான, கடினமாக உழைக்கும் மற்றும் மிகவும் உண்மையான நபர்களுடன் பணியாற்றுவதில் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்