இந்திய அளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. இவர் தற்போது படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் சில திரைப்படங்களை கமிட் செய்துள்ளார் விரைவில் அதற்கான அறிவிப்பும் வெளிவரும். நடிப்பு மட்டுமின்றி சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளார்.
இந்நிலையில், ஒரு பெண்ணின் வாழ்க்கையில் இருபது முதல் முப்பது வரை எந்த வகையில் மாறுபட்டதாக உள்ளது என்பதை கவிதையாக சமந்தா எழுதியுள்ளார்.
அதில், ” இருபதுகளில் தொலைத்த காலம், இன்பம், குடும்ப நேரம் என பலவற்றையும் விட முப்பதுகளில் கிடைக்கும் உண்மையான அன்பும், தன்னை உணர்ந்தலும் மிகவும் முக்கியமானது” என சமந்தா குறிப்பிட்டுள்ளார்.