tamilnaadi 146 scaled
சினிமாபொழுதுபோக்கு

நடிகை சாய் பல்லவி சொத்து மதிப்பு

Share

நடிகை சாய் பல்லவி சொத்து மதிப்பு

மலையாள திரையுலகம் மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை சாய் பல்லவி. பிரேமம் படத்தில் கதாநாயகியாக நடித்து அனைவரையும் கவர்ந்த இவர் தமிழில் தியா படத்தின் மூலம் அறிமுகமானார்.

தொடர்ந்து தனுஷின் மாரி 2, சூர்யாவின் NGK போன்ற படங்களில் நடித்து வந்தார். மேலும் தற்போது சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் பக்கமும் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.

நடிகை சாய் பல்லவி மருத்துவ படிப்பை முடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், 31 வயதாகும் நடிகை சாய் பல்லவியின் சொத்து மதிப்பு குறித்து தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம்.

பல கோடி ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வரும் நடிகை சாய் பல்லவியின் சொத்து மதிப்பு ரூ. 40 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வரும் சாய் பல்லவி, ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என்கின்றனர்.

சாய் பல்லவி 9 மே 1992 அன்று தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் பிறந்தார். இவரது சொந்த ஊர் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி ஆகும். அங்கு இவருக்கு சொந்தமான வீடு இருக்கிறது.

மேலும் நடிகை சாய் பல்லவி Audi Q3 – ரூ. 53 லட்சம் மதிப்புள்ள காரை பயன்படுத்தி வருகிறார். இதுமட்டுமின்றி Mitsubishi Lancer Evo X, Maruti Suzuki Nexa போன்ற கார்களையும் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...