தமிழில் நடிகர் விஜயுடன் தமிழன் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமான பிரியங்கா சோப்ரா, அதன்பின்னர் பாலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக நடித்துவந்தார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு பாடகர் நிக் ஜோனாசை, பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டார்.
இந்தநிலையில் பிரியங்காவின் பதிவுகள், அவர் பற்றிய செய்திகளுக்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கின்ற நிலையில், தற்போது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் விதமாக வாடகைத் தாய் மூலம் கிடைத்த குழந்தையால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம் என்று பிரியங்கா சோப்ராவும் அவரது கணவர் நிக் ஜோனாசும் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலைப் படித்த ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
#CinemaNews