நடிகை பிரியாமணி, நடிகர் கார்த்தியின் முதல் படமான ‘பருத்திவீரன்’ மூலம் மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தவர்.
‘மலைக்கோட்டை’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘ராவணன்’ உள்ளிட்ட தமிழ் படங்களைத் தாண்டி, அவர் மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பிற மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.
அவர், விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9 அன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.
பிரபலங்களின் சந்தை மதிப்புக்கு (Market Value) ஏற்ப சம்பளம் கேட்பதும் பெறுவதும் தவறில்லை என்றும், அது நியாயமானது என்றும் பிரியாமணி கூறியுள்ளார்.
எதிர்பார்த்த அளவுக்குச் சம்பளம் கிடைக்கவில்லை என்றாலும் அது தன்னை பாதிப்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தன் மதிப்பு என்னவென்று தனக்குத் தெளிவாகத் தெரியும் என்றும், அதனால் தனக்குத் தகுதியான சம்பளத்தை மட்டுமே கேட்பேன், அதிகமாகக் கேட்க மாட்டேன் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.