மரண வேதனை, அது நடக்கவில்லை என்றால் தற்கொலை செய்திருப்பேன்- மும்தாஜ்
தமிழ் சினிமாவில் கவர்ச்சி புயலாக வலம் வந்த நடிகைகளில் ஒருவர் தான் மும்தாஜ்.
டி.ராஜேந்தர் இயக்கிய மோனிசா என் மோனாலிசா என்கிற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவருக்கு முதல் படமே நல்ல பிரபலத்தை கொடுத்தது.
அப்படத்தை தொடர்ந்து மலபார் போலீஸ், குஷி, பட்ஜெட் பத்மநாபன், லூட்டி, சாக்லேட் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.
தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழி படங்களில் நடித்து வந்தவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.
அண்மையில் ஒரு பேட்டியில் நடிகை மும்தாஜ் பேசும்போது, ஒரு நாள் திடீரென என் இடுப்பு பகுதியை அசைக்கவே முடியாத அளவிற்கு வலி இருந்தது, பல மருத்துவர்களை பார்த்தும் என்ன பிரச்சனை என சொல்ல முடியவில்லை.
2 வருடங்கள் அந்த வலியோடு இருந்த எனக்கு ஒரு பரிசோதனையில் Auto Immune நோய் இருப்பது தெரியவந்தது.
இதனால் எங்கெல்லாம் எலும்பின் ஜாயிண்ட் இருக்கிறதோ அந்த இடத்தில் எல்லாம் கடுமையான வலியாக இருக்கும். மன அழுத்தத்திலும் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன், ஏன் அழுகிறேன் எதற்கு அழுகிறேன் என்றே தெரியாது, அதுதான் மன நோய்.
என் மனஅழுத்தத்தை புரிந்து கொண்டு என்னை அதில் இருந்து மீட்டது என் அண்ணா,என் குடும்பம் மற்றும் அல்லாத்தான்.
அவர்கள் மட்டும் இல்லாமல் இருந்து இருந்தால் நான் தற்கொலை செய்து கொண்டு இருப்பேன் என தனது வாழ்க்கையில் நடந்த சோகமான விஷயத்தை பகிர்ந்துள்ளார்.